அந்த ஊர்ல படம் ரிலீஸ் ஆகுறதுக்கு நம்ம மானத்தை வாங்கிட்டீங்களேடா, கார்த்தி- பவன் சர்ச்சைக்கு ப்ளூ சட்டை கமெண்ட்

0
336
- Advertisement -

பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், பவன் கல்யாண்- கார்த்தி சர்ச்சைக்குறித்து விமர்சித்திருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. இவர் தற்போது இயக்குனர் பிரேம்குமாரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மெய்யழகன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிகர் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன் உள்ளிட்ட நடித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்தத் திரைப்படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார். வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களில் பட குழுவினர் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

- Advertisement -

மெய்யழகன் ப்ரோமோஷன்:

அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது. அப்போது நிகழ்ச்சியில் தொகுப்பாளர், நடிகர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா? என்று கேட்டு இருந்தார். அதற்கு கார்த்தி, லட்டு வேண்டாம். இப்போது அது சென்சிட்டிவான விஷயம். அதைப் பற்றி பேசாதீர்கள். எனக்கு எந்த லட்டு வேண்டாம் என்று எதார்த்தமாக பேசியிருந்தார். ஆனால் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலானது.

லட்டு சர்ச்சை:

அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், லட்டு விவகாரத்தை பலரும் கேலி செய்வதை என்னால் பார்க்க முடிகிறது. சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கூட லட்டு சென்சிட்டிவ் டாபிக் என்று கூறியிருந்தார்கள். ஒரு நடிகராக நான் உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பு 100 முறை யோசிக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு, நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

கார்த்தி மன்னிப்பு- பவன் பாராட்டு:

அதில், நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைபிடிப்பேன் என்று பதிவிட்டு இருந்தார். இப்படி கார்த்தி மன்னிப்பு கேட்டது குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து இருந்தார்கள். பின் கார்த்தியின் மன்னிப்பிற்கு பவன் கல்யாண் பாராட்டியதோடு, மெய்யழகன் படத்தின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நன்றி தெரிவிக்கும் வகையில் கமெண்ட்கள் செய்திருந்தார்கள்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்:

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், அவன் சினிமாவிலேயே ஓவர் பில்டப் பண்ணி காமெடி செய்வான். இப்படி அரசியலில் பருப்பு மாதிரி சீன் போடுறான். அவனுக்கு பயந்து, மன்னிப்பு கேட்கிறதுக்கு, தேங்க்ஸ் சொல்லி மண்டி போடறதும் நன்றாக இல்லை. அந்த ஊர்ல நம்ம படம் ரிலீஸ் ஆகறதுக்கு, நம்ம ஊர் மானத்தையே வாங்கிட்டீங்களேடா ? என்று பதிவிட்டுள்ளார். மேலும் பவன் கல்யாணை, அவசரப்பட்டு மன்னிப்பு கேட்டுட்டாரு நாமளும் மன்னிச்சிட்டதா சொல்லி கெத்தை மெயின்டைன் பண்ணுவோம்’ என்றவாறு கலாய்த்து இருக்கிறார்.

Advertisement