விஜய்யை விமர்சித்து சீமான் பேசிய கருத்துக்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்திருக்கும் போஸ்ட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்ட கூட்டம் சமீபத்தில் நடைபெற்று இருந்தது. அதில் சீமான் பேசியிருந்தது, தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று, எங்கள் கன்று என்று புதிய தத்துவம் சொன்னதைக் கேட்டு நான் பயந்துவிட்டேன். இப்போது காட்டுக் கோழியும், நாட்டு கோழியும் ஒன்னு என்று சொல்கிறார்கள். காரணம், சமீபத்தில் வந்த ஒரு படத்தில் வில்லன், ஹீரோ ஒருத்தரே நடித்ததால் தான் நான் இப்படி நினைத்தேன்.
திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு. இரண்டும் ஒன்று என கூறும் அடிப்படையே தவறான விஷயம். இது கொள்கை இல்லை. சாலையின் அந்தப் பக்கம் இருக்க வேண்டும் இல்லை என்றால் இந்த பக்கம் இருக்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்து விட வேண்டியது தான். இது நடுநிலை இல்லை கொடு நிலை. நான் குட்டி கதை சொல்பவன் இல்லை. வரலாற்றை சொல்ல வந்தவன். நீங்கள் அம்பேத்காரை, பெரியாரை எல்லாம் இப்போதுதான் படிக்கிறீர்கள். நான் படித்து பிஎச்டி முடித்துவிட்டேன். நீங்கள் இலக்கிய வரலாற்றை இப்போது தான் ஆராய்கிறீர்கள்.
சீமான் ஆவேச பேட்டி:
நாங்கள் அந்த வரலாற்றை கரைத்து குடித்து இருக்கிறோம். நாம் நெடுஞ்செழியன் பாண்டியனுடைய பேரன் பேத்திகளடா. கருவிலேயே யார் என்னுடைய எதிரி என்று தீர்மானித்து பிறந்தவன். நான் ஏசி அறையில் அமர்ந்து சிந்திப்பவன் கிடையாது. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் சத்தமாக பேசுகிறேன் என்றால் ஆமாம், என்னிடம் சரக்கு இருக்கிறது, கருத்து இருக்கிறது. அதனால் தான் நான் சத்தமாக பேசுகிறேன். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா? எங்களுடைய இலட்சியத்திற்கு எதிராக பெற்ற அப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான்.
விஜய் குறித்த விமர்சனம்:
தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் எங்ககிட்ட காட்ட வேண்டாம். 2026 ஆம் ஆண்டு என்னுடைய ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது என்று பயங்கரமாக பேசியிருந்தார். இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்த சீமான் இந்த கூட்டத்தில் கிழித்து தொங்க விட்டிருக்கிறார். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் பதிவு:
அதாவது, கோவையை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர் ஒருவர், திமுக vs தவெக என்பதை மாற்றி நாதக vs தவெக என்று மாயை சீமான் உருவாக்குகிறார். இளைஞர் வாக்குகளை எல்லாம் மொத்தமாக எங்கள் தளபதி பறித்துக் கொள்வார் என்று அவர் பயந்துவிட்டார். இவரைப் பற்றி எங்கள் தலைவர் தப்பாகவே பேசவில்லை. பிறகு ஏன் மாநாடு முடிந்து ஒரு வாரம் ஆகியும் இவர் கதறிக் கொண்டே இருக்கிறார். லாரியில் அடிபடுவார் , கூமுட்டை போன்ற இழிவான மோசமான தாக்குதல் எதற்கு? தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்தாலும் ஏற்றுக்கொள்வோம்.
திமுக Vs த.வெ.க. என்பதை மாற்றி நா.த.க Vs த.வெ.க. எனும் மாயையை உருவாக்குகிறார் சீமான்.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 2, 2024
இளைய சமூகதின் வாக்குகளை மொத்தமாக எங்கள் தளபதி பறித்து கொள்வார் என இவர் அஞ்சுகிறார்.
இவரைப்பற்றி எங்கள் தலைவர் தவறாக பேசவில்லை. பிறகு ஏன் மாநாடு முடிந்து ஒரு வாரம் ஆகியும் கதறிக்கொண்டு…
சீமானுக்கு கொடுத்த பதிலடி:
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி பென்னி க்விக் படத்தை நீங்கள் வீட்டில் மாட்டி வணங்குவது தான் தமிழர் பண்பு. அதே போல தான் பெரியாரும். அவர் எந்த ஜாதி, எந்த மாநிலமும் என ஆராயத் தேவையில்லை. பெரியார் தான் எங்கள் கொள்கை தந்தை. எம்ஜிஆர், விஜயகாந்த் யாரையும் மொழி, சாதி, இனம் பார்த்து பிரிக்க மாட்டார்கள். அதோடு சில நாட்கள் கழித்து என் தம்பியை திட்ட எனக்கு உரிமை இல்லையா? என்று அப்படியே அந்தர்பல்டி அடிப்பார். இனி எங்கள் தளபதியே சமரசமானாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எக்காலத்திலும் சீமானுடன் கூட்டணி வேண்டாம் என்று தளபதியிடம் வற்புறுத்துவோம். டிசம்பரில் மண்டல வாரியாக தமிழக சுற்றுலா பயணம் மூலம் எங்களை சந்திக்க விஜய் வரும்போது இதை நிச்சயம் பேசுவோம் என்று கூறியிருக்கிறார்.