சிவகார்த்திகேயனை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.
சிவகார்த்திகேயன் பேட்டி:
இதை அடுத்து தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன், நான் எப்போதும் இந்த சினிமா துறையை குறை சொன்னதே கிடையாது. நான் இந்த சினிமா துறையில் இருக்க வேண்டும். ஆனால், அதனுடைய அழுத்தம் என்னுடைய குடும்பத்தை பாதிக்கக் கூடாது. காரணம், அவர்கள் எல்லோருமே சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சாதாரண ஒருவன் பெரிய வளர்ச்சிக்கு வரும்போது சில பேர் தான் பாராட்டுகிறார்கள். ஆனால், சிலருக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை.

சினிமா குறித்து சொன்னது:
எதனால் இவன் வருகிறான்? இவனிடம் என்ன இருக்கிறது? ஏன் இவன் வருகிறான்? என்று பல கேள்விகளை எனக்கு நேரே கேட்டிருக்கிறார்கள். நான் இந்த மாதிரியான விஷயங்களை பலமுறை சந்தித்து இருக்கிறேன்.
அந்த கேள்விகளுக்கெல்லாம் நான் என்னுடைய சிரிப்பின் மூலம் கடந்து விடுவேன். என்னை காலி செய்வதற்கே சோசியல் மீடியாவில் ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கின்றது. என்னுடைய படங்கள் நல்லா ஓடி கலெக்சன் வாங்கினால் அந்த கிரெடிட் எல்லாம் எனக்கு கொடுப்பதில்லை. டான் படத்தில் எஸ். ஜே சூர்யாக்கு தான் பாராட்டுகள் கிடைத்தது.
ப்ளூ சட்டை மாறன் பதிவு:
அமரன் படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தும் சாய் பல்லவிக்கு தான் நல்ல நடிகை என்ற பாராட்டுக்கள் கிடைத்தது என்றெல்லாம் புலம்பி இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் ட்வீட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், டான் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் அமரனில் சாய் பல்லவி நடிப்புதான் அப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது பலரின் கருத்து. அது உண்மையும் கூட, பார்க்கிங் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், லப்பர் பந்தில் தினேஷ் நடிப்புதான் பெரிதாக பேசப்பட்டது. அதற்காக ஹரீஷ் கல்யாண் நடிப்பை யாரும் குறை கூறவில்லை. நல்ல கதைகளை தேர்வு செய்கிறார் என அவரை பாராட்டவே செய்கிறார்கள்.
டான் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் அமரனில் சாய் பல்லவி நடிப்புதான் அப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது பலரின் கருத்து. அது உண்மையும் கூட..
— Blue Sattai Maran (@tamiltalkies) January 8, 2025
பார்க்கிங் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், லப்பர் பந்தில் தினேஷ் நடிப்புதான் பெரிதாக பேசப்பட்டது.
அதற்காக ஹரீஷ் கல்யாண் நடிப்பை யாரும்… pic.twitter.com/ctovMs18xI
சிவாவை பற்றிய விமர்சனம்:
அவரும் இப்படி பொதுவில் வந்து 'என்னை யாரும் பாராட்டல' என்று புலம்பவில்லை. ஆகவே இப்படி சென்டிமென்ட் பிட்டெல்லாம் போடாமல்.. வாலி, பருத்தி வீரன், பிதாமகன், அசுரன் போன்று சிறந்த நடிப்பை தர முயலுங்கள். பாராட்டு தானாக வரும். ஒரே ஒரு அமரன் ஓடியதும்.. நீங்கதான் அடுத்த விஜய் என ஒரு க்ரூப் காமடி செய்தால்.. இன்னொரு க்ரூப் கலாய்க்கத்தான் சொய்யும். இதைவிட பல மடங்கு விமர்சனங்களை தாண்டித்தான் ரஜினி, கமல் அரை நூற்றாண்டு கடந்தும், விஜய், அஜித் கால் நூற்றாண்டு கடந்தும் இந்த இடத்தில் இருக்கிறார்கள். லேசா கீறுனதுக்கே.. இப்படி அழுதா எப்படி தம்பி? நடிப்பை மேலும் இம்ப்ரூவ் பண்ற வழியை பாருங்க என்று கூறி இருக்கிறார்.






