சமீபத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஆதரவாக ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் என பிரபலமானவர் சவுக்கு சங்கர். இவரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் அரசியல்வாதிகளையும், சினிமா பிரபலங்களையும் வெளுத்து வாங்கி இருக்கிறார். தற்போது இவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறுமாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, கடந்த ஜூலை 22ஆம் தேதி தனியார் youtube சேனல் ஒன்றுக்கு சவுக்கு சங்கர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் மண்டி கிடக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலானது அடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை மூலம் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும், சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் முடிவு செய்தது.
சவுக்கு சங்கர் மீது எழுந்த குற்றச்சாட்டு:
இதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சவுக்கு சங்கர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவுமிட்டிருந்தது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தார்கள். அப்போது தன் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்படும் வீடியோ ஆதாரங்கள் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆறு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்திருந்தார். பின் சவுக்கு சங்கருக்கு வீடியோ பதிவு நகல்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சவுக்கு சங்கர் கைது:
இந்நிலையில் இன்று இந்த வழக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் ஆஜராகி இருந்தார். விசாரணையில் சவுக்கு சங்கர் பேசியதும், எழுதியதும் நீதிமன்ற அவமதிப்பு தான் என்று தெரியவந்தது. இதனை அடுத்து ஆறு மாத காலம் சிறை தண்டனை வழங்கி உயர் நீதி உத்தரவிட்டிருக்கிறது . மேலும், அவர் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்து சிறையில் அடிக்க நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. பிறகு போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து இருக்கின்றனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும்
கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் வீடியோ:
இந்த நிலையில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், சவுக்கு சங்கர் உண்மையான, நியாயமான மனிதர். சமூக அக்கறை கொண்டவர். அவரை எனக்கு நன்றாக தெரியும். என்றைக்கும் ஒரு பக்கமாக நின்று பேச மாட்டார். எந்த பக்கம் நியாயம் இருக்கிறதோ அந்த பக்கம் தான் பேசுவார். சரி, தப்பு என்று முகத்துக்கு நேராக சொல்லக் கூடிய மனிதர். என்னுடைய அப்பா நான் சிறுவயதில் இருக்கும்போது, அசிங்கமாக ஆயிரம் வருடம் வாழ்வதைவிட சிங்கம் மாதிரி ஒரு நாள் வாழலாம் என்று சொல்லுவார். அதற்கு பொருத்தமானவர் சவுக்கு சங்கர் தான்.
ஆதரவாக பேசிய ப்ளூ சட்டை மாறன்:
இந்த மாதிரி குற்றத்தில் யாராவது மாட்டி இருந்தால், நான் செய்தது தவறு. நான் அந்த மாதிரி பேசவில்லை மன்னித்து விடுங்கள் என்றெல்லாம் சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள். ஆனால், சவுக்கு சங்கர் நான் பேசியது உண்மைதான் என்று நேர்மையாக கூறினார். அதனால் தான் அவர் மக்கள் மத்தியில் ஹீரோ மாதிரி இருக்கிறார். நாம் எல்லோரும் அவருடன் இருப்பது தான் நல்லது. சமூக அக்கறையுடன் இருக்கும் அவருக்கு நாம் துணையாக இருப்பது காலத்தின் கட்டாயம். வி சப்போர்ட் சவுக்கு சங்கர், வி ஸ்டாண்ட் வித் சவுக்கு சங்கர் என்று கூறி இருக்கிறார்.