எதே 300 கோடியா ? – வாரிசு படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்டை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்.

0
556
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. அதாவது துணிவு தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் வாரிசு விநியோகஸ்த்தர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தங்களுடைய படங்கள் தான் இந்த பொங்கலின் “உண்மையான வெற்றியாளர்” என்று சோசியல் மீடியாக்களில் அறிவித்தனர்.

-விளம்பரம்-

இது ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போலாகி இணயவாசிகளுக்கு இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில் தான் வாரிசு படம் 7 நாட்களில் 210 கோடியை வசூல் செய்துள்ளது நன்பா என்று அதிகாரப்பூர்ப அறிவிப்பை கொடுத்தது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்த நிலையில் விஜய் வாரிசு பட வெற்றிக்கு நட்சத்திர விடுதியில் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார்.

- Advertisement -

11 நாட்களில் 250 கோடி வசூல் :

மேலும் இந்த விருந்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி படிப்பள்ளி, கணேஷ், ஷாம், சரத்குமார் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் சில சர்ச்சையான விமர்சனங்களை இயக்குனர் வம்சி மற்றும் சரத்குமார் கூறியது வைரலாகி இருந்தது. இதனையடுத்து அவ்ர்கள் வெளியிட்டிருந்த பதிவில் தங்களின் படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

தளபதி 67 :

விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிதான ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” என்ற படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தில் பல வில்லன்கள் இருக்கின்றன. அதோடு திரிஷா பல ஆண்டுகளுக்கு பின்பு விஜய்யுடன் முக்கிய கதாபாத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜ் சினிமா டிக்கெட் யுனிவர்சில் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது என்று ரசிகர் மத்தியில் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

27 நாட்களில் 300 கோடி வசூல் :

இந்த நிலையில் தான் “வாரிசு”படக்குழு வாரிசு படம் 300 கோடியை வசூல் செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏற்கனவே 11 நாட்களில் 250 கோடி வசூலித்து என்று சொல்லும் போது நெட்டிசன்கள் மத்தியில் பல கடுமையான விமர்சனங்கள் வந்து நிலையில் தற்போது 27 நாட்களில் 300 கோடியை சம்பாதித்துள்ளது என்று கூறியது பெரும் சர்ச்சைக் உள்ளகி இருக்கிறது. இந்த நிலையில் தான் பிரபல சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் 300 கோடி என்பதை உலக மகா உருட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் :

ப்ளூ சட்டை மாறன் திரைப்படங்களை முதல் நாளே பார்த்துவிட்டு படத்தை பற்றி குறை கூறி சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் கடுமையான விமர்சங்களை வாங்கி வருகிறார் என்று குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல “வாரிசு” படத்தையும் பார்த்தவுடன் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் வாரிசு படம் சீரியல் போல இருக்கிறது என்றும் விமர்சித்தார்.

உலகமாக உருட்டு :

மேலும் தொடந்து வாரிசு படத்தை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது மீண்டும் வாரிசு படத்தை விமர்சித்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். வாரிசு படம் 300 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியான நிலையில். இது உலக மகா உருட்டாக இருக்கின்றது என்று கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.இப்படி விமர்சிப்பதற்கு விஜய் ரசிகர்களும் கடுமையாக திட்டி வருகின்றனர்.

Advertisement