‘உருட்டு’ லியோ ட்ரைலர் சர்ச்சை குறித்து லோகேஷ் சொன்ன விளக்கத்தை கலாய்த்த ப்ளூ சட்டை.

0
1308
BlueSattaiMaran
- Advertisement -

லோகேஷை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

லியோ படம்:

அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கான பாஸ்கள், விழா நடைபெறுவதற்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. ஆனால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக `ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

லியோ ட்ரைலர்:

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலரை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் வெளியான லியோ டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் ட்ரெய்லரில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கெட்ட வார்த்தை விஜய் பேசி நடித்திருக்கிறார். இதனால் பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

லோகேஷ் கொடுத்த விளக்கம்:

இதனால் லியோ ட்ரைலர் குறித்து சிலர் நெகட்டிவான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். இதனை அடுத்து இந்த சர்ச்சைகளுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விளக்கம் கொடுத்திருந்தார். அதில் அவர், இந்த சம்பவத்திற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் வற்புறுத்தியதால் தான் அவர் பேசினார். லியோ ட்ரெய்லரில் இடம் பெற்ற ஆபாச வார்த்தை கதைக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் அதிகம் தேவைப்பட்டது.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

விஜய் இந்த வசனத்தை பேசலாமா? என்று தயங்கி தான் இருந்தார். ஆனால், நான் தான் கண்டிப்பாக இது தேவை என்று அழுத்தம் கொடுத்தேன். அதனால் தான் விஜய் பேசினார். விஜய் அப்படி கெட்ட வார்த்தை பேசியது யாருடைய மனதையும் கஷ்டப்படுத்தி இருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். இதற்கு நெட்டிசன்கள் பலருமே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்த விளக்கத்தை ப்ளூ சட்டை மாறன் தனது டீவ்ட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘உருட்டு’ என ஒரே வார்த்தையில் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement