அந்த படத்துக்கு அப்புறம் படம் எடுக்கவே தோணல – மேடையில் பேசிய சமுத்திரக்கனி. எந்த படம் தெரியுமா?

0
122
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரகனி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து இவர் விஜயகாந்தை வைத்து நிறைந்த மனசு, சசிகுமாரின் நாடோடிகள், போராளி, ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய சித்தம் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் நடிகராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து இவர் ஈசன், சாட்டை, நீர் பறவை, வேலையில்லா பட்டதாரி, ரஜினி முருகன், விசாரணை, காலா, வடசென்னை, ஆர்ஆர்ஆர், துணிவு, தலைக்கூத்தல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமுத்திரக்கனி குறித்த தகவல்:

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சைரன் என்ற படத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இதை அடுத்து இவர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், சமீபத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் யாவரும் வல்லவரே. இந்த படத்தை ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

ராமம் ராகவம் படம்:

தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் தன்ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ராமம் ராகவம். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அப்பா – மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்த படத்திற்கு அருண் சிலுவேரு இசை அமைத்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தினுடைய டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள், நடிகர்கள் பலர் கலந்து கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

விழாவில் சமுத்திரக்கனி சொன்னது:

அப்போது விழாவில் சமுத்திரக்கனி, அப்பா என்றாலே எனக்குள்ள ஒரு வேதியியல் மாற்றம் நடக்கும். அப்பாவாக இதுவரை நான் பல கதைகளில் நடித்திருக்கிறேன். இந்த படத்திலும் அப்பாவாக நடித்திருக்கிறேன். அப்பாவாக பத்து படத்தில் நடித்திருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வெவ்வேறு மாதிரி இருக்கும். ஒரு முறை கூட அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று நான் நினைத்ததே கிடையாது. புரிந்து கொள்ளவே முடியாத பந்தம் தான் அப்பா- மகன் உறவு. இந்த படம் மக்களிடம் போய் சேர வேண்டும்.

படம் எடுக்காத காரணம்:

காரணம், ஒவ்வொரு முறையும் சிறிய படங்களை எடுத்து விட்டு அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டி இருக்கிறது. அப்பா என்ற ஒரு படம் எடுத்தேன். இன்றுவரை அது என்ன ஆனது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. இப்படித்தான் இன்றைய சூழல் இருக்கிறது. அதன் பிறகு எனக்கு படம் எடுக்கவே தோணவில்லை. சந்தோஷத்துடன் படத்தை எடுத்து விடுகிறோம். ஆனால், அது கொண்டு போய் சேர்க்கும் போது மகிழ்ச்சியே இல்லை. அதற்கான வலியும் தெரியவில்லை என்று ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.

Advertisement