மீண்டும் பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்- ‘டீன்ஸ்’ படம் குறித்து என்ன சொல்லி இருக்காரு பாருங்க

0
391
- Advertisement -

டீன்ஸ் படத்தை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமா துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கி நடித்து இருக்கும் படம் ‘டீன்ஸ்’. டி. இமான் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தை பயாஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தில் ஒரு ஊரில் 12 சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ரொம்ப மெச்சூராக தங்களை நினைத்துக் கொள்கிறார்கள்.

- Advertisement -

டீன்ஸ் படம்:

சொல்லப்போனால், அவருடைய பெற்றோர்கள் அவர்களை குழந்தைகளைப் போல நடத்துவது பிடிக்கவில்லை. பெரியவர்களை போல நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் தங்களை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது ஒரு சிறுமி, தன்னுடைய பாட்டியின் ஊரில் பேய் இருப்பதாக சொல்கிறார். அதையும் பார்த்துவிடலாம் என்று அந்த 12 சிறுவர்கள் பள்ளியை கட் அடித்துவிட்டு செல்கின்றார்கள். பின் ஒரு பையனையும் தங்களுடன் இழுத்துக்கொண்டு 13 பேர் செல்கிறார்கள். அப்போது அவர்கள் செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது.

படம் குறித்த தகவல்:

இதனால் அவர்கள் காட்டு வழியில் பயணிக்கிறார்கள். மேலும், அவர்கள் செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து விடுகிறார்கள். இதனால் சிறுவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. அடுத்தடுத்து சிறுவர்கள் தொலைந்து கொண்டே போவதால் மற்றவர்கள் தேடுகிறார்கள். கடைசியில் என்ன ஆனது? பேய் இருக்கிறதா? என்பது தான் படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதை அடுத்து டீன்ஸ் படம் தொடர்பாக பார்த்திபன் டீவ்ட் ஒன்று போட்டு இருந்தார்.

-விளம்பரம்-

பார்த்திபன் பதிவு:

அதில் அவர், சத்தியமா சொல்றேன், TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா, நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thought ல் எடுக்கப் பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும் என்று கூறி இருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

இந்நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் பேசியதை சுற்றி காட்டி படம் ஹிட்டுன்னு சொல்றாரா? என்று கிண்டலாக பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், மீண்டும் பார்த்திபனை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டார். இரவின் நிழல் படத்தின் போதும் இப்படித்தான் தேவையில்லாமல் பேசி இருந்தார். முதல் சிங்கிள் ஷார்ட் படம் என்று பார்த்திபன் சொல்லியிருந்தது பொய் என்றும், ஹாலிவுட்டில் அந்த மாதிரி படம் வந்துவிட்டது என்றெல்லாம் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement