விமர்சகர்களுக்கு திருப்பூர் சுப்பிரமணி விதித்த கட்டுப்பாடு – கடுப்பாகி ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு

0
261
- Advertisement -

திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் வைத்த கோரிக்கைக்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் தலைவராக திருப்பூர் சுப்ரமணியம் இருக்கிறார். இவர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இது தொடர்பாக இவர் வெளியிட்ட ஆடியோவில், இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் படத்தை திரையிட வேண்டும். தமிழகத்தில் புதிய படங்களுக்கான சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு தான் நடக்கிறது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியாகிறது. மற்ற மாநிலங்களிலும் சிறப்பு காட்சிகளை தமிழகத்தில் ஆரம்பமாகும் 9 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். படம் வெளியாக பின் இரண்டு வாரத்திற்கு யாருமே விமர்சனம் செய்யக்கூடாது.

- Advertisement -

திருப்பூர் சுப்பிரமணியம் வைத்த கோரிக்கை

நீதிமன்றத்தை அணுகி இரண்டு வாரத்திற்கு யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்று தடை வாங்க வேண்டும். பல கோடி ரூபாய் போட்டு படம் எடுத்தால் அதிகாலை காட்சியில் சினிமாவை பார்த்துவிட்டு தமிழகத்தில் காட்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பே youtube சேனல்களில் விமர்சனங்கள் என்ற பெயரில் படத்தை காலி செய்து விடுகிறார்கள். சமீப காலங்களில் இப்படியான விமர்சனங்கள் வரைமுறை இல்லாமல் வருவதால் நிறைய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

படங்கள் நிலைமை:

தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என்று youtubeபர்கள் வீடியோ எடுப்பதை அனுமதிக்க கூடாது.
அப்படி வீடியோ எடுப்பதை தியேட்டரில் உரிமையாளர்கள் தான் அனுமதிக்க கூடாது. இப்படி இவ்வாறு அனுமதிப்பது நமது வியாபாரத்தை நாமே சிதைப்பது போன்ற ஒன்று. சிலரின் தவறான விமர்சனங்களால் ஏராளமான படங்கள் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன், கங்குவா போன்ற படங்களும் கடுமையான எதிர்மறை விமர்சனங்களால் படம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

விமர்சனங்கள் குறித்து சொன்னது:

கேரளாவில் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் தன்னுடைய படங்களுக்கு விமர்சனம் செய்ய தடை வாங்கியதை கேள்விப்பட்டேன். அதுபோலவே இங்கிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கமும் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படி இவரை வைத்த கோரிக்கை தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், உலை வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியாது. Facebook, X, Youtube, Insta போன்ற அனைத்திலும் சினிமா விமர்சனங்களை தடை செய்தால்.. அதனபிறகு வெளியாகும் குப்பை காவியங்கள் எல்லாம் மெகாஹிட் ஆகிவிடுமா? வாய்ப்பே இல்லை.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

படம் முடிந்தபிறகு செல்போன் மூலம் தனக்கு தெரிந்தவர்களிடம் இந்த படத்துக்கு போய் பணம், நேரம் ரெண்டையும் வேஸ்ட் பண்ணாதீங்க. அதுக்கு பதிலா பக்கெட் பிரியாணி வாங்கி சாப்டுங்க..என்று சொல்வதை தடுக்க இயலாது. இல்லாவிட்டால் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீடு, பக்கத்து வீடு என தான் நேரில் சந்திப்போரிடம் இதை சொல்வதை தடுக்க இயலுமா? சிலபல ஆண்டுகளுக்கு முன் சோஷியல் மீடியா, செல்ஃபோன் இல்லாதபோது கூட mouth talk மூலம் பல படங்கள் தோற்றதுதானே வரலாறு? ஆனால் இப்போது மட்டும் இவர்களுக்கு மக்கள் அதிக கோபம் வரக்காரணம் என்ன தெரியுமா? முதல் மூன்று அல்லது நான்கு நாட்களில்..எல்லா தியேட்டர்களிலும் ஒரு படத்தை வெளியிட்டு சுடச்சுட வசூலை அள்ளிவிட வேண்டும். படம் மொக்கையாக இருந்தாலும்.. பெரிய ஸ்டார்கள் நடித்த படம் இந்த முதல் மூன்று நாட்களில் பெரிய வசூலை ஈட்டி விடும். அதற்கு தடையாக பப்ளிக் ரிவியூ மற்றும் சோஷியல் மீடியா ரிவியூக்கள் இருப்பதுதான் இந்த கோவத்திற்கு காரணம். இதுவரை தனிநபர் ரிவியூ மீது இருந்த கோபம் தற்போது பப்ளிக் ரிவியூவில் உண்மையை பேசும் மக்கள் பக்கம் திரும்பி இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement