கங்குவா படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் கங்குவா படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், சிவாவும் சூர்யாவும் சேர்ந்து படம் எடுக்கப் போகிறார்கள் என்ற உடனே சுத்தமாக எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. காரணம், சிறுத்தை சிவா மீது அவ்வளவு தான் நம்பிக்கை இருந்தது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:
அவர் எடுத்த படங்கள் அப்படி இருந்தது. அதேபோல் கடந்த பத்து வருடங்களில் சூர்யாவுடைய ஜெய்பீம் படத்தை தவிர உருப்படியாக வேற எந்த படமுமே இல்லை. எல்லா படமும் மோசமாகத்தான் இருந்தது. ரெண்டு பேரும் சேர்ந்து என்ன படம் கொடுக்கப் போகிறார்கள்? மொக்கையா தான் இருக்கும் என்று இருந்தோம். ஆனால், படம் ஆரம்பித்த பிறகு தான் அது மொக்கை இல்லை, காட்டு மொக்கை என்று தெரிந்தது. அதற்கு காரணம் ஆரம்பத்தில் வந்த கோவா போஷன் தான். அதில் ஒன்றுமே இல்லை. ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் சொன்ன கதை, யோகி பாபு செய்த காமெடி எல்லாம் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
Kanguva Close 🤣💥#ThalapathyVijay #Thalapathy69 pic.twitter.com/rQBCPO7UJh
— 𝗧𝗢𝗠𝗠𝗬𝗦𝗛𝗘𝗟𝗕𝗬🧊🔥 (@Tommy_Shelbyoff) November 15, 2024
தேவிஸ்ரீ பிரசாத் குறித்து சொன்னது:
இப்படி இருக்கும்போதே பிளாஷ்பேக் போர்ஷன் போய்விட்டார்கள். அதில் கங்குவா காண்பிக்கிறார்கள். சரி இதிலாவது எல்லாம் இருக்குமா? என்று பார்த்தால் ரெண்டு குரூப்பும் கத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்த படத்தில் எல்லோருமே தூங்காமல் இருந்ததற்கு காரணம் தேவிஸ்ரீ பிரசாந்த் தான். எல்லா இசை கருவிகளை வைத்தது பத்தாமல் பாத்திரக்கடைக்குள் எல்லாம் புகுந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வந்து தட்டியிருக்கிறார். ஒரே இரைச்சல் தான் இருந்ததே தவிர படத்தில் ஒன்றுமே இல்லை. அதையும் மீறி சிலர் தூங்கி இருக்கிறார்கள்.

படம் குறித்து சொன்னது:
அவர்கள் எத்தனை கங்குவாவை கடந்து வந்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு சின்ன பையன் வருகிறான். அவன் பொண்ணா, பையனா தெரியவில்லை. இவரை வைத்து ஏதாவது காண்பிப்பார்கள் என்றால் இதுதான் கதை என்கிறார்கள். ஆராய்ச்சி கூடத்தில் என்ன நடந்தது? அந்தப் பையன் எப்படி ஆராய்ச்சி கூடத்திற்கு வந்தான்? இதையெல்லாம் இரண்டாம் பாகம் என்கிறார்கள். தயவுசெய்து இரண்டாம் பாகத்தை எடுக்காதீர்கள். இதில் வேற கேமியோ ரோல் எல்லாம் வருதாம். காட்டு மொக்கை என்பார்கள் ஆனால் இங்கு காடு, காடா போய் மொக்கை படம் எடுத்திருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கிறார்.

படத்தின் கதை:
படத்தில் 1070 மற்றும் 2024 என்று வெவ்வேறு காலகட்டத்தில் கதை நகர்கிறது. இரண்டு காலகட்டத்தையுமே மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். தற்போது இருக்கும் காலகட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு ஜூடா என்பவருடைய மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து கங்குவா கதை தொடங்குகிறது. அதில் பெருமாச்சி தீவின் நாயகனாக வலம் வருபவர் கங்குவா. கங்குவாவுக்கும் அவருடைய குழுவுக்கும் போர் செய்வது தான் குலத்தொழில். வீரமும் இயற்கை விளைந்த அந்த மண்ணை தன்னுடைய வசம் படுத்த ரோமானிய அரசு நினைக்கிறது. அதற்கு பிறகு என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? கங்குவாவை கொள்ள துடிக்கும் கொடுவாவின் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.






