இமயமலைக்கு செல்லும் முன் ரஜினி என்னை சந்தித்தார், இதான் அந்த வீடியோ – ட்விட்டரில் ப்ளூ சட்டை ஏற்படுத்திய பரபரப்பு.

0
1967
bluesattai
- Advertisement -

ரஜினியுடன் பேசிய வீடியோவை வெளியிட போவதாக கூறிய ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளார்கள். அண்ணத்த படத்தில் இருந்தே ரஜினி ரசிகர்களுக்கும் ப்ளூ சட்டைக்கும் ட்விட்டரில் பனிப்போர் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி ரசிகர்களை வம்பிழுத்து வருகிறார் ப்ளூ சட்டை இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரஜினியை தான் சந்தித்தாகவும் அப்போது சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், அந்த சந்திப்பின் போது எடுத்த வீடியோவை இன்று வெளியிட இருப்பதாகவும் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து அந்த வீடியோவை பலரும் ஆவலாக எதிர்பார்த்தனர். ஆனால, இந்த பதிவை போட்ட அடுத்த சில நிமிடங்களின் சந்தானம் பட காமெடி மீம் ஒன்றைய் போட்டு ‘உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள் 11 மணிக்கு வர இருக்கும் திருப்பங்களுக்காக காத்துக் கொண்டிருங்கள், வீடியோ கண்டிப்பாக வரும். ஆனால். அது உண்மைகள் நிறைந்த வேறு விதமாக இருக்கும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ‘வடிவேலு காமெடி சீனை எடுத்து போட்டு அதில் வடிவேலு ரஜினி போலவும், வெண்ணிற ஆடை மூர்த்தி ப்ளூ சட்டை மாறன் போலவும், மற்றொரு கதாபாத்திரம் செய்யாறு பாலு போலவும் குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், அந்த காட்சியில் , மற்றவர்களின் பில்லை ஜெயிலர் வசூல் கணக்கில் ரஜினிகாந்த் எழுதிக்கொள்கிறார் என்பது போல அந்த வீடியோ மீம் மூலம் ரஜினி, அவரது ரசிகர்கள், ஆதரவாளர்களை கலாய்த்திருக்கிறார்.

ப்ளூ சட்டையின் இந்த பதிவை பார்த்த பலர், இதற்கு தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தீர்களா ? இதெல்லாம் அட்டென்ஷன் சீக்கிங் தானே என்று திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலரோ ப்ளூ சட்டையின் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிய்வித்து வருகின்றனர். அந்த வகையில் விட்டராசி ஒருவர் சந்தானம் மீம் போட்டு அந்த பதிவை போடும் போதே நினைச்சேன் இந்த மாதிரி தான் இருக்கும்னு. நல்லா இருக்குன்னே என்று பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்துள்ள ப்ளூ சட்டை மாறன் ‘ இதுதான் தெளிவு. புரிதல். நன்றி நண்பரே. இந்த ட்வீட்டை  காலைலயே போட்டாச்சி. ஆனால் பல பருந்து குஞ்சுகள்.. அதை படிக்காம கெட்ட வார்த்தைல இங்க வாந்தி எடுத்துட்டு இருக்காங்க. ரசிகர்கள் அல்லாத நண்பர்களுக்கும் காலை 8.28 மணிக்கு இத்தகவல் ட்வீட் மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆகவே இதில் விளையாட ஒன்றுமில்லை. புரிந்துகொண்டோருக்கு நன்றி.

வேண்டுமெனில்  உங்கள் தலீவர் சென்னை திரும்பியதும் நேரடி விவாதத்திற்கு ஒரு நிகழ்ச்சியை நடத்தட்டும். அவர் என்னை கேள்விகள் கேட்கட்டும். நானும் கேள்விகளை கேட்கிறேன். யார் பேசியது சரியென்பது மக்களே தீர்மானிக்கட்டும். அந்த தைரியம் உங்கள் தலீவருக்கு உண்டா அல்லது சினிமா வில்லன்களிடம் மட்டும்தான் கம்பு சுற்றுவாரா? குறிப்பு: உங்க தலீவர் ஆன்மிகம், அமைதின்னு பேசுறாரு. நீங்க ஏன்டா கலீஜ்  வாயனுங்க மாதிரி கொச்சையா பேசிட்டு இருக்கீங்க? அவரை இந்த விஷயத்துலயாவது ஃபாலோ பண்ணி உருப்படுங்க. இல்ல அப்படித்தான் துள்ளுவோம்னு சவுண்ட் வுட்டா… தாராளமா வுடுங்க. உங்க நாகரீகம் ஊரெல்லாம் நாரட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement