நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம் – கவின், விஜய் சேதுபதி என்று பலர் நேரில் சென்று வாழ்த்து.

0
1595
m-s-baskar
- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். இதில் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் சமீபத்தில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றிருந்தார் ஆதித்யா பாஸ்கர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்க அவரை போன்றே தோற்றமுடைய ஒரு நபரை இந்த படத்தின் இயக்குனர் தேடி வந்தாராம். அதன் பின்னர் நடிகர் எம் எஸ் பாஸ்கரன் மகன் ஆதித்யாவை பார்த்த இயக்குனர் பிரேம், பின்னர் அதித்யா தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று எண்ணினாராம்.தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்ர நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகனான ஆதித்யாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் பாருங்க : ஸ்கின் டைட் பேண்ட், இடுப்புக்கு மேல் ஏறிய டி-ஷர்ட். உடல் எடை குறைத்த பின் முதன் முறையாக மாடர்ன் உடையில் மீரா ஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

இவரது மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக உள்ளார். பல திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்துள்ளார். ரகுல் ப்ரீத்தி சிங், ராஷ்மிகா போன்ற பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்துள்ளார். இந்த நிலையில் நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகளும் ஆதித்யா பாஸ்கரின் தங்கையுமான ஐஸ்வர்யா பாக்ஸரருக்கு , அகுல் என்பவருடன் திருமண நிட்சயதார்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஐஸ்வர்யா-அகுல் திருமணத்தை 2020ஆம் ஆண்டே நடத்தி முடிக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேதி தள்ளிப்போனது. இப்படி ஒரு நிலையில் இந்த தம்பதியருக்கு திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் விஜய் சேதுபதி, கவின்,  சினேகா, தேவதர்ஷினி, குட்டிபத்மினி, சந்தியா, சாந்தினி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், வி.சேகர், சித்ரா லட்சுமணன், ஆர்.பாண்டிராஜ் என்று பலர் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-
Advertisement