படத்தை ரிலீஸ் செய்ய கன்னட மக்களிடம் கெஞ்சிய போலி புரட்சித்தமிழன் சத்யராஜ் – ப்ளூ சட்டை பகிர்ந்த வீடியோ

0
709
- Advertisement -

இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினை போல தற்போது தமிழகமும் கர்நாடகமும் இருந்து வருகிறது. காவிரி நதிநீர் தமிழகத்திற்கு அளிப்பதற்கு கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இங்கிருந்து கர்நாடகா பெங்களூர் செல்லும் தமிழக வாகனங்களையும் ஓட்டுனர்களையும் தாக்கி வருகிறது. தமிழகத்திற்கு எதிராக அங்கு ஒரு போராட்டத்தையும் கன்னட அமைப்புகள் நடத்தி வருகிறது.

-விளம்பரம்-

சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் சித்தா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாதியில் வந்த கன்னட அமைப்புகள் தமிழ் நடிகர் சித்தார்த் இங்கு எப்படி வரலாம் என்றும் அவரை மிரட்டி வெளியே அனுப்பினார்கள். அதற்கு கர்நாடகத்தின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிவராஜ் குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் மன்னிப்பு கூறினார். கர்நாடகாவில் சித்தார்த் வெளியேற்றியது பற்றி இங்கு உள்ள தமிழகத்தில் உள்ள நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர்கள் சங்கமும் கண்டனம் அறிக்கை கூட வெளியிடவில்லை.

- Advertisement -

காவேரி நதிநீர் விவகாரம்:

நடிகர் ரஜினிகாந்த் சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கு ஒரு அறிக்கையை விட்டார். ஆனாலும் இந்த சித்தா படத்தின் தொடர்பாக அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. காவேரி நதிநீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக பேசக்கூடாது என்றும் கர்நாடகவிற்கு தான் ஆதரவாக பேச வேண்டும் என்றும் அன்புள்ள கன்னட அமைப்புகள் ரஜினிகாந்துக்கு மிரட்டல்களை அளித்து வருகிறது. சினிமாவில் மட்டுமே விவசாயம் காப்போம் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வரும் நடிகர்களை குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை

நெட்டிசன்கள் கண்டனம்:

இவர்களுடைய வீரம் எல்லாம் அனைத்தும் சினிமாவில் மட்டுமே என்று பலர் இவர்களை விமர்சித்து வருகின்றனர். அதோடு கர்நாடகாவிற்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்கள் திரைப்படத்தை அங்கு வெளியிட முடியாது என்று இங்கு உள்ள தமிழக நடிகர்கள் மௌனம் காத்து இருக்கிறார்கள். மேலும், தமிழகத்தை தாண்டி கர்நாடகாவில் தான் தமிழ் படங்கள் அதிக அளவில் ஓடுகின்றன. அடுத்த மாதம் வெளியாகியுள்ள லியோ படம் கர்நாடகாவில் அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இங்குள்ள தமிழக நடிகர்கள் யாவரும் வாய் திறந்து பேச மாட்டார்கள் என்று விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது.

-விளம்பரம்-

கன்னட நடிகர்கள் குறித்த தகவல்:

அதோடு கன்னடாவில் உள்ள நடிகர்கள் பலருமே காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு தர மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால், தமிழ் நடிகர்களுக்கு அந்த ஒற்றுமை இல்லை. இந்த நிலையில் நடிகர் சத்யராஜை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் ட்விட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர், பாகுபலி 2 ரிலீஸ் செய்ய கன்னட மக்களிடம் கெஞ்சிய போலி புரட்சித்தமிழன் சத்யராஜ்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

தமிழக மக்களின் அனைத்து நியாயமான பிரச்னைகளுக்கும் குரல் தருவேன் என ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோவில் பேசிய சத்யராஜ் காவிரி விவகாரம் வரும்போதெல்லாம் மேடைகளில் தீ பறக்க பேசிய சத்யராஜ். தற்போது மொத்தமாக ஆஃப் ஆகிவிட்டார். அட்லீஸ்ட்.. சித்தார்த்தை அவமானப்படுத்திய கன்னட அமைப்பினரை கண்டித்தாவது பேசி இருக்கலாம். கட்டப்பா.‌..ஏன் இந்த பலத்த மௌனமப்பா? என்று அவர் ஏற்கனவே பேசிய வீடியோவை இணைத்து இருக்கிறார்.

Advertisement