நல்ல படம் எடுக்க கூடாதுன்னு சத்தியம் பண்ணிட்டாங்களா! KRK-வை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்

0
558
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் காத்துவாக்குல 2 காதல்.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நேற்று வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி- ராம்போ, சமந்தா – கதீஜா, நயன்தாரா- கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ki. இந்த படத்தில் விஜய் சேதுபதி அதிஷ்டம் இல்லாதவராக இருக்கிறார். எது வேண்டும் என்று நினைத்தாலும் அது அவரை விட்டு செல்கிறது. இந்த நிலையில் இவருடைய வாழ்க்கையில் சமந்தா, நயன்தாரா இருவரும் வருகிறார்கள்.

- Advertisement -

காத்துவாக்குல ரெண்டு காதல்:

இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் வேற என்ன மேஜிக் நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இது ஒரு பக்கமிருக்க, படம் வெளிவந்த உடனே அனைவரும் எதிர்பார்ப்பது ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ தான். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், பிரபலமான உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் நிலைமை:

இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. மேலும், படம் நன்றாக இருந்தாலே இவர் கழுவி கழுவி கழுவி ஊத்துவார். அதுவும் மொக்கை படங்கள் கிடைத்தால் போதும் சும்மா விடுவாரா? எந்த படம் வெளியானாலும் சரி இவருடைய விமர்சனத்திற்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது தான் வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் கையில் சிக்கி தத்தளித்து இருக்கிறது காத்துவாக்குல 2 காதல் படம். இந்த படம் குறித்து நிலைமை ப்ளூ சட்டை மாறன் கூறியது, நல்ல படம் எடுக்க கூடாது என்று சத்தியம் பண்ணிக் கொண்டு வந்திருக்கிறார்கள் போல. ஒரு ராசியில்லாத ஹீரோவை இரண்டு ஹீரோயின்கள் லவ் பண்ணுகிறார்கள். அதுக்கப்புறம் என்ன நடக்குது? தான் படத்தோட கதை.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ:

படமே எடுக்க தெரியாதவர்களிடம் கதையை கொடுத்தால் கூட ஒரு மினிமம் கியாரண்டி உடன் கதையை எடுத்து இருப்பார். ஆனால், முதல் பாகத்தை ஏதோ பார்க்கலாம். இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட்டை தொலைத்து விட்டார்களா? என்று தெரியவில்லை. படம் எதை நோக்கிப் போவது தெரியாமல் போய் இருக்கிறது. இந்த படம் ரொமான்ஸ், காமெடி என்று சொல்கிறார்கள், ஆனால் படத்தில் ரொமான்ஸும் இல்லை, சொல்லிக்கிற அளவுக்கு காமெடியும் இல்லை. இங்க சுத்தி அங்க சுத்தி முதலில் ஆரம்பித்த இடத்திற்கே வந்து இருக்கிறது.

படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறியது:

படம் இலக்கை அடையவில்லை என்றுதான் சொல்லணும். படம் முழுவதும் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. வழக்கம் போல் தமிழ் சினிமாவை அனிருத் தான் காப்பாற்ற வேண்டிய நிலைமைக்கு வந்து இருக்கிறது. பாவம் அவரும் என்னத்தான் பண்ணுவார்? மொக்க படமெடுப்பு எடுப்பது என்று ஆகிவிட்டது. அதை இரண்டு மணி நேரத்திலேயே முடித்துக் கொள்ளுங்கள். இரண்டரை மணி நேரம் எல்லாம் எங்களால் தாங்க முடியாது என்று இயக்குனர் முதல் நடிகர்கள் வரை என எல்லாருமே ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement