படத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர்.! நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா புகார்.!

0
466
Agni-Devi

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் பாபி சிம்ஹா. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சூதுகவ்வும், ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. தற்போது இவரது நடிப்பில் அக்னி தேவி என்ற படம் நாளை(மார்ச் 22) வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மீது ஒரு விசித்திரமான காரணத்திற்காக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர் பாபி சிம்ஹா இந்த படத்தை ஜான் பவுல் ராஜ் என்ற இயக்குனர் இயக்கியுள்ளார் ஆனால் இந்த படத்திற்கு பாபி சிம்மா வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தாராம்.

- Advertisement -

ஆனால், பாபி சிம்ஹா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது போல படமாக்கியுள்ளனர் என்று பாபி சிம்மா அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதில் பிரச்சினை என்னவெனில் பாபி சிம்ஹாவிற்கு பதிலாக வேறு ஒரு டூப்பை வைத்து தான் பெரும்பாலான காட்சிகளை எடுத்துள்ளதாக பாபி சிம்மா, இயக்குனர் மீது புகார் அளித்துள்ளார். இதனால் படக்குழு மிகுந்த குழப்பத்தில் ஆழ்துள்ளது.

இதுகுறித்து பாபி சிம்ஹா தெரிவிக்கையில் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட கதைக்கும் பின்னர் படப்பிடிப்பு நடக்கும்போது இருந்த கதைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.இதனால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தாராம் பாபி சிம்மா. எனவே, ஐந்து நாட்கள் மட்டும் நடித்துவிட்டு இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம். அவனால் வேறு ஒரு டூப்பை வைத்து இந்த படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர். அதற்கான ஆதாரங்களையும் பாபி சிம்மா காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement