தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பாபி சிம்மா. இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார் இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்திக் கொடுத்தது 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜிகிர்தண்டா படம் தான். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். தமிழ்நாட்டிலுள்ள மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கேங்க்ஸ்டர் படம்.
இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பாபி சிம்மா அவர்கள் ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் பாபி சிம்ஹாவின் மாஸ் லூக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
விக்ரம் – துருவ் விக்ரம் சேர்ந்து நடிக்கும் படம்:
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விக்ரம். இவருடைய நடிப்பில் உருவாகி வரும் படம் தான் மகான். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். இது இவருடைய இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக இணைந்து நடிக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் அபூர்வம். சிவாஜி கணேசன்- பிரபு, சத்யராஜ்- சிபிராஜ், கார்த்திக்- கௌதம் கார்த்திக் என சில கூட்டணி வரும்.
மகான் படம் பற்றிய தகவல்:
அந்த வரிசையில் தற்போது விக்ரம்-துருவ் விக்ரம் இணைந்திருக்கிறார்கள். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் மகான். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், நேபாளம், டார்ஜலிங், சென்னை போன்ற பல பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது.
மகான் படம் ரிலீஸ் தேதி:
இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அவர் விலகி இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் மூன்று மொழிகளில் வரும் பிப்ரவரி மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பாபி சிம்ஹாவின் மாசான லுக் புகைப்படம்:
இந்நிலையில் இந்த படத்தில் பாபி சிம்ஹா அவர்கள் ஒரு மாசான ரோலில் நடித்திருக்கிறார். ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு இவர் இந்த படத்தில் மிரள வைக்கும் அளவிற்கு நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது பாபி சிம்ஹாவின் மாசான லுக் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் அனைவரும் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்திலும் பாபி சிம்ஹா உடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.