திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு தனது மனைவி ரனா தத்தாவை விவாகரத்து செய்து விட்டார் அமீர் கான்.
அதன் பின்னர் நடிகர் அமீர் கான் "லகான்" படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகனும் பிறந்தார். தனது முதல் மனைவியுடன் விவாகரத்து ஆன போதும் தனது முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் அமீர் கான் நன்றாக பார்த்துக் கொள்கிறார்.
சமீபத்தில் தனது முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஐராவுடன் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்தார் நடிகர் அமீர் கான். நீண்ட வருடங்களுக்கு பின்னர் தனது மகளுடன் வந்திருந்த அமீர்கான் பத்திரிகையாளர்களுக்கு தனது மகளுடன் போஸ் கொடுத்தார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வர, அமீர் கானின் மகளா இது என்று அவரது ரசிகர்கள் ஆச்சார்யத்தில் இருக்கின்றனர்.




