தனுஷ்ஷ ஆபீஸ் தொடைக்கற வேலைக்குக்கு கூட யாரும் வச்சிக்க மாட்டாங்க’ – அன்று தனுஷை கேலி செய்த பாலிவுட் நடிகர், இன்று போட்ட ட்வீட்.

0
665
dhanush
- Advertisement -

இந்திய நடிகர்களில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையை தீர்த்து வைத்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழ் சினிமாவின் ஸ்லிம் சிவாஜி, தென்னெக ப்ருஸ்லீ, நடிப்பு அசுரன் என்று பல்வேறு பட்டப் பெயர்களால் அழைக்கப்படுவர் தனுஷ்.

-விளம்பரம்-
Atrangi Re movie review: Sara Ali Khan, Dhanush are soul of a unique love  story, Akshay Kumar adds the Midas touch | Bollywood - Hindustan Times

பாலிவுட்டிலும் கலக்கும் தனுஷ் :

தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்த தனுஷ், ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார் தனுஷ். அந்த படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘ஷமிதாப்’ படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

தனுஷின் கலாட்டா கல்யாணம் :

இந்த படத்தில் நடிகர் தனுஷ் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு பின்னர் தனுஷின் பாலிவுட்டில் படு பிரபலமானார். இப்படி ஒரு நிலையில் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘அத்ரங்கி ரே ‘ படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக நடித்துள்ளார் தனுஷ்.

Image

பாலிவுட் சர்ச்சை பிரபலம் :

இந்த திரைப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பாலிவுட் நடிகரும், விமர்சகருமான Kkr தனுஷ் குறித்து போட்ட பழைய பதிவும் தற்போது ‘அத்ரங்கி ரே’ படம் குறித்தும் போட்ட ட்வீட் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

நடிகர் கமல் ரஷீத் கானை விரும்பும் ரசிகர்களும் உள்ளனர் வெறுக்கும் ரசிகர்களும் உள்ளனர்.தற்போது 43 வயதாகவும் அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு இவரே எஸ்.ஆர். கே என்று பட்டம் கொடுத்துக்கொண்டார்.இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களின் வெறுப்பை சம்மதித்தார்.

அன்று கேலி, இன்று பாராட்டு :

இப்படி ஒரு நிலையில் இவர் தனுஷின் ‘அத்ரங்கி ரே ‘ படம் குறித்து போட்டுள்ள பதிவில் ‘தென்னிந்திய நடிகர்களில் பன் மொழி ஸ்டார் என்றால் அது தனுஷ் மட்டும் தான். ‘அத்ரங்கி ரே’ படத்தில் அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். ஆனால், இதே KKR தனுஷின் முதல் இந்தி படமான ‘ராஞ்சனா’ படம் வெளியான போது தனுஷின் உருவத்தை பற்றி கேலி செய்து ட்வீட் போட்டு இருந்தார்.

சிவகார்த்திகேயன் போட்ட கமன்ட் :

அதில் ‘உங்களின் ஆபீஸ் பாய் அல்லது டிரைவர் கிடைக்கவில்லை என்றால் வியப்படைய வேண்டாம் கண்டிப்பாக அவர்கள் தனுஷை பார்த்து பாலிவுட்டில் ஹீரோவாக நடிக்க சென்று இருப்பார்கள்’ என்று பதிவிட்டிருந்தார். அதே போல இன்னொரு பதிவில் ‘தனுஷ் மட்டும் ரஜினியின் மருமகனாக இல்லை என்றால் அவரை ஆபீசை துடைக்க கூட யாரும் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் ஆனால் இன்று அவரை எல்லாரும் பெருமையாக பேசுகிறார்கள் என்ன உலகம்’ என்றும் பதிவிட்டு இருந்தார்இந்த பதிவை பலர் தற்போது பகிர்ந்து தனுஷின் வளர்ச்சியை பற்றி புகழ்ந்து வருகின்றனர். மேலும், இந்த பதிவு குறித்து கமன்ட் செய்து இருக்கும் சிவகார்த்திகேயன் ‘இதே நபர் தான் இப்படி சொல்லி இருந்தார்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement