தன் குழந்தைகளை பார்க்க சென்னைக்கு சுப்ரைஸ் விசிட் அடித்த ஷாருக்கான் – முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாரா.

0
527
nayanthara
- Advertisement -

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் வசூல் செய்து இருக்கிறது. மேலும், இவர் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல இவரது படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

பதான் :

இப்படி இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவது ரசிகர்களை கொண்ட ஷாருக்கான் சித்தார்த் இயக்கத்தில், தயாரிப்பாளர் யாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பதான்” . இப்படத்தில் சால்மன் கான், ஹிர்திக் ரோஷன், தீபிகா படுகோன், ஜான் ஆபிராம் போன்ற பாலிவுட் சினிமாவில் பல முன்னி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியானது.

- Advertisement -

800 கோடி வசூல் :

இப்படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் முதல் பாடல் வந்ததில் இருந்தே பலவிதமான சர்ச்சைகள் நிலவி வந்தன. மேலும் Boycot பதான் என்றும் Boycot ஷாருக்கான் எனும் அளவுக்கு போராட்டங்கள் வெடித்தன. ஆனாலும் இப்படம் கந்த 25 ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் 800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.மேலும் கடந்த நான்கு வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காத ஷாருக்கான் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஜவான் படம் :

இந்நிலையில் தற்போது ஷாருக்கான் இயக்குனர் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அட்லீ இந்த படத்திற்காக அங்கேயே மூன்று வருடங்கள் தங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார். ஜவான் படத்தில் கதாநாயகியாக தென்னநிதிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் தீபிகா படுகோன், விஜய் சேதுபதி என பலர் நடிக்கின்றனர். ஜவான் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

அதிரடி விசிட் :

இந்த நிலையில் ஜவான் படத்திற்காக அடிக்கடி சென்னை வந்து செல்லும் ஷாருக்கான் படத்தின் கதாநாயகியான நயன்தாராவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவரது வீட்டிற்கு அதிரடியாக சென்றிருந்தார். ஷாருக்கான் வரைவதை அறிந்த ரசிகர்களும் பத்திரிகை பிரபலங்களும் நயன்தாராவின் வீட்டிற்குள் வெளியில் காத்துக்கொண்டிருக்க, நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்ப்பதற்காக ஷாருக்கான் வந்திருந்தார்.

முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாரா :

நயன்தாராவின் குழந்தைகளை பார்த்த பின்னர் வீட்டிற்கு வெளியில் வந்த ஷாருக்கானை வழியனுப்ப கார் வரை சென்று அவருக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் நயன்தார. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக கூட ஜவான் பட இணயக்குனரான அட்லீயின் குழந்தைகளை பார்த்துவிட்டு வாழ்துக்களையும் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement