’இந்தியாவின் மிகப்பெரிய தட்டு’க்கு நடிகர் சோனு சூட்டின் பெயர் – ஒரே வேலையில் இத்தனை பேர் சாப்பிடலாமாம்.

0
381
sonu
- Advertisement -

இந்தியாவில் மிகப் பிரபலமான திரைப்பட நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சோனு சூட். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் மாடல், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் 1999-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கள்ளழகர்’. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சோனு சூட் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து திரைப்படம் நெஞ்சினிலே, சந்தித்த வேளை, மஜ்னு, சாகசம், ராஜா, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி என பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எல்லோருக்கும் ஹீரோவாக திகழ்கிறார். இவர் நடிகராக மட்டும் இல்லாமல் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

கொரோனா காலத்தில் சோனு சூட் செய்தது:

சமீபத்தில் கூட விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார். கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவியுள்ளார். இப்படி கொரோனா பேரிடர் காலத்தில் சோனு சூட் பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார். கொரோனா நேரத்தில் வெளியே வர பயந்த பிரபலங்கள் மத்தியில் சோனு செய்த உதவிகள் வேற லெவல். இதனால் இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தார்கள். சமீபத்தில் கூட சோனு சூட்டிற்கு சிலை கூட வைத்து நன்றிகளை தெரிவித்து இருந்தனர். அதுமட்டும் இல்லாமல் நடிகர் சோனு சூட் அவர்கள் மக்களுக்கு உதவி தனது சொத்துக்களை அடமானம் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய உணவு தட்டு :

இந்த நிலையில் தான் ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள கோண்டாப்பூர் அருகே கிறிஸ்மத் ஜெயில் என்ற பெயரில் ஒரு அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் சிறையை மையமாகக் கொண்டு உணவுகள் வடிவமைத்து வாடிக்கையாளர்க்ளுக்கு விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் தான் அந்த உணவகம் இந்தியாவில் மிகப்பெரிய உணவு தட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த தட்டிற்கு பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் பெயரை அந்த உணவகத்தின் நிர்வாகிகள் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

சோனு சூட் இன்ஸ்டா பதிவு :

இதனை அடுத்து அவர்கள் அழைத்தான் பேரில் அங்கு கலந்து கொண்ட சோனு சூட் அங்கே ரசிகர்களுடம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதோடு அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிருந்து அதற்கு கீழ் வாசகம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் “இந்தியாவில் மிகப்பெரிய தட்டு இப்போது என் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் நான் சைவ உணவு உண்பவர் என்பதினாலும் குறைவான அளவில் மட்டுமே உணவு உட்கொள்ளுவர் என்பதினாலும் ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் சாப்பிட கூடிய அந்த தட்டிற்கு என்னுடைய பெயரை வைப்பது அவ்வளவு நன்றாக இருக்காது” என்று பதிவிட்டிருந்தார்.

நன்றி சொன்ன உணவகம் :

இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் பதிவிற்கு பதிலளித்த அந்த உணவகத்தின் நிர்வாகிகள் கூறுகையில் “மிகப்பெரிய தட்டிற்கு உங்கள் பெயரை தவிர எங்களுக்கு வேறு சிறந்த பெயர் கிடைக்கவில்லை இருந்தாலும் உங்களுடைய நேர்மையான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி’ என்று அதில் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாகிவில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement