குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஏற்பாடு செய்த கருத்தரங்கம். புறக்கணித்த முக்கிய பாலிவுட் பிரபலங்கள்

0
1224
caa
- Advertisement -

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் கடுமையான போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் டெல்லி, அஸ்ஸாம், மும்பை என்று பல்வேறு பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின் போது பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதாக கூறி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் வன்முறையாக தடியடி செய்து தாக்கினார்கள்.

-விளம்பரம்-
Image result for piyush goyal Ca Meeting
பியூஷ் கோயல்

அதோடு பல மாணவர்களையும் கைதும் செய்தார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களும் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள். மேலும், இந்த போராட்டம் நாடு முழுவதும் பூகம்பம் போல் வெடித்தது. குடியுரிமை சட்டம் திருத்தம் கண்டித்து பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் போராட்டத்தை தீவிரம் ஆக்கினர். இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடை பெற்று வருகின்றது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் மும்பையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பாஜக கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு நிகழ்வில் பாலிவுட் நடிகர்கள் பலரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து உள்ளார்கள்.

- Advertisement -

தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் குடியுரிமை சட்ட திருத்தத்தின் மீதான புரட்டுகளும் உண்மைகளும் என்ற தலைப்பில் பாஜக கட்சி சார்பில் நேற்று கருத்தரங்குக்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த கருத்தரங்கிற்கு பாலிவுட் மற்றும் மராத்தி சினிமா துறையை சேர்ந்த நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தான் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னணி பாலிவுட் நடிகர் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த நிகழ்வில் ஜாவேத் அக்தர், விக்கி கவுசல், ஆயுஷ்மான் குரானா, ராவினா டன்டான், போனி கபூர், கங்கனா ரணாவத், மாதூர் பந்தார்கர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று கூறினார்கள். ஆனால், அவர்கள் யாருமே அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அந்த நிகழ்வில் ரித்தேஷ் சித்வானி, பூஷன் குமார், குணால் கோலி, ரமேஷ் தவுரானி, ராகுல் ராவெய்ல் உள்ளிட்டவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பாலிவுட்டில் முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து உள்ளார்கள். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement