என்னது? சூர்யா இதுநாள் வரை விக் வச்சி நடித்தாரா ? சர்ச்சை ட்வீட் போட்ட பாலிவுட் பிரபலம்.

0
2442
surya

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார்நடிகர் சூர்யா. சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. விஜய் அஜித்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக திகழ்ந்து வருகிறார் சூர்யா. என்னதான் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வந்தாலும். சூர்யா அடிக்கடி பல்வேறு விமர்சனங்களில் சிக்கியிருக்கிறார்.

இவரது உயரத்தை கேலி செய்து பலர் விமர்சித்து இருக்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் ‘எவ்வளவு உயரம் என்பது முக்கியமில்லை, எவ்வளவு உயருகிறோம் என்பது தான் முக்கியம் ‘ என்று வசனம் பேசி அசத்தி இருந்தார் சூர்யா. அவ்வளவு ஏன் சமீபத்தில் கூட சர்ச்சை நடிகையான மீராமிதுன் சூர்யாவிற்கு நடிக்கவே தெரியாது என்று ட்வீட் போட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தில் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை கேலி செய்த அனைவருக்குமே ஒரு பதிலடியாக கொடுத்திருந்தார் சூர்யா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா இதுநாள் வரை விக் வைத்து தான் நடித்து வந்தார் என்றும் தற்போது தலையில் முடி நடுவதற்காக துபாய் சென்று உள்ளார் என்று பாலிவுட் விமர்சகரான கமால் ஆர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கமால் கான் இதுபோன்ற சர்ச்சையான கருத்துக்களை கூறுவது ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இவர் வடநாட்டின் ப்ளூ சட்டையை போன்றவர் சினிமா விமர்சகரான இவர் பாலிவுட் படங்களை ப்ளூ சட்டை ஸ்டைலில் மிகவும் கடுமையாக விமர்சிப்பார்.

படத்தை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களின் உருவத்தை கூட கேலி செய்வார். இதனாலேயே இவருக்கு பல பிரச்சனைகள் கூட வந்து இருக்கிறது. அவ்வளவு ஏன் கடந்த செப்டம்பர் மாதம் இவர் இமைக்காநொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் அனுரக் கஷ்யப் இறந்துவிட்டார் என்று ட்வீட் போட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல இந்த வீக் பஞ்சாயத்திற்கு எல்லாம் அடிக்கடி விஜய்தான் சிக்குவார் ஆனால் இந்த முறை சூர்யா சிக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement