கொரோனா பாதிப்பு : ஹோட்டலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பாடகி. வைரலாகும் வீடியோ.

0
3494
corona
- Advertisement -

கடந்த இரண்டு மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள்.

- Advertisement -

உலக மக்களின் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் முடிந்தவரை இந்தியர்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்றும் இந்த நோய் பரவலை தடுத்தாலே நம்மால் இந்த வைரஸ் தாக்குதலை சமாளித்து விட முடியும் என்றும் மக்களுக்கு கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இந்தியா முழுவதும் இந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை நான்கு பேர் இறந்து உள்ளார்கள். கொரோனா வைரஸினால் பஞ்சாப் மாநிலத்தில் ஒருவர் மரணமடைந்து உள்ளார். இதற்கு முன்னதாகவே டெல்லி, கர்நாடகம், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் என்ற விகிதத்தில் உயிரிழந்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த கொரோனா வைரஸினால் 15 பேர் உடல் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள்.

அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்கள். கரோனா வைரஸ் குறித்து பலர் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த கொரோனா வைரஸ் தொற்று ஈரானில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியர் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி பாடகியாக வலம் வரும் கனிகா கபூர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது இவர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி உள்ளார். தற்போது லக்னோவ் KGMU மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். இவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

Advertisement