கழிவறை கூட இல்லாத கிராமத்தில் சிக்கி தவித்துவரும் சீரியல் நடிகை. அவரே வெளியிட்ட வீடியோ.

0
133212
raajput
- Advertisement -

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் தமிழகத்தில் கொரோனாவினால் 621 பேர் பாதிக்கப்பட்டும், 8 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

மேலும், கொரோனா விழிப்புணர்வு குறித்து பல பிரபலங்கள் சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு,கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பல பேர் தங்களுடைய குடும்பங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் மாட்டி கொண்டு உள்ளார்கள்.

- Advertisement -

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் சிலர் வீடுகளுக்குள் பாதுகாப்பாக, சுகமாக இருந்தாலும் பலர் வெளியே மாட்டி கொண்டு தவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஹிந்தி நடிகை ஒருவர் பீகாரில் உள்ள கிராமத்தில் மாட்டி கொண்டு உள்ளார். பாலிவுட்டில் பிரபலமான நடிகை ரத்தன் ராஜ்புட். இந்நிலையில் தற்போது இவர் பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் சிக்கிக்கொண்டு உள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை. இங்கு அவர் எதற்காக சென்றார் என்று தெரியவில்லை. ஆனால், கொரோனவினால் பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டிக் கொண்டு உள்ளார். இங்கு மின்சார வசதி, கழிவறை வசதி கூட இல்லையாம். ஒவ்வொரு நாளும் போக்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறதாம்.

-விளம்பரம்-

படிப்பதற்கு செய்தி தாள் கூட இல்லையாம். இந்த நிலைமை எப்போ மாறுமோ என்று தவித்து வருகிறார். இது குறித்து நடிகை ரத்தன் ராஜ்புட் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெயிட்டு உள்ளார். அதில் அவர் கொரோனவினால் தன் நிலை குறித்து மன வேதனை உடன் கூறி உள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இவர் பல ஹிந்தி சீரியல்களில் நடித்து உள்ளார். ஹிந்தி சினிமாவில் Agle Janam Mohe Bitiya என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரத்தன் ராஜ்புட். இதனை தொடர்ந்து இவர் மகாபாரதம், பியர் பைல்ஸ் போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் சீரியலில் மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7ல் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்.

Advertisement