அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்விட்ட நபர் கைது – யாருன்னு பார்த்தா இவரு தான்.

0
1982
ajith
- Advertisement -

நடிகர் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்த அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் விஜய்க்கு பின்னர் வசூல் சாதனைகளை படைத்தது வருவது இவர் தான் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம்.

-விளம்பரம்-
நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு ...

இந்நிலையில் ஈச்சம்பாக்கத்தில் உள்ள தல அஜித்தின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக அஜித்தின் வீட்டில் சோதனை செய்துள்ளனர்.ஆனால், இது பொய்யான மிரட்டல் என்பது தெரிவந்துள்ளது.

இதையும் பாருங்க : மேடம், பளுவுஸ்லா போட மாட்டாங்க போல – ஷிவானியின் 5 மணி போஸ்ட்டுக்கு குவியும் லைக்ஸ்.

- Advertisement -

இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் . போலீசார் நடத்திய விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர் மிரட்டியது தெரியவந்த்து. இதனையடுத்து மிரட்டல் விடுத்த புவனேஸ்வரன் என்ற 20 வயதான நபரை நேற்றிரவு மரக்காணம் போலீசார் கைது செய்து, நீலாங்கரை காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அஜித வீடு

மேலும், அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. இவர் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement