மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு – உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாம்பே ஜெயஸ்ரீ. என்ன ஆனது ?

0
407
BombayJayashree
- Advertisement -

பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி ஆவார்.இவர் இவர் தமிழில் மின்னலே என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடலின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.

-விளம்பரம்-

1983 ஆம் ஆண்டில் இருந்து இவர் பாடி வந்தாலும் இளசுகள் மத்தியில் இவர் பிரபலமானது என்னவோ வசீகரா பாடல் மூலம்தான் . இவர் அதனை தொடர்ந்து இவர் இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா போன்ற பலருடைய இசையமைப்பில் பல வெற்றிப்பாடல்களை பாடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் வயலின் வாத்திய கலைஞர் வால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார்.

- Advertisement -

மூளையில் ரத்தக் கசிவு

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களை பாடி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தொடர்ந்து பல்வேறு இசை கச்சேரிகளிலும் பாடி இருக்கிறார். இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, சமீபத்தில் இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பாம்பே ஜெயஸ்ரீ கலந்து கொண்டிருந்தார். பின் இவர் லண்டனின் டங் ஆடிட்டோரியம், யோகோ ஓனோ லெனான் சென்டர், லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார். இதனால் இவர் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

பாம்பே ஜெயஸ்ரீக்கு சிகிக்சை:

அது மட்டும் இல்லாமல் இவர் சுயநலவை இழந்து கீழே விழுந்து இருக்கிறார். இதனால் இவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிக்சை அளித்து இருந்தார்கள். அப்போது தான் பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனை அடுத்து அவருக்கு தீவிர அறுவை சிகிச்சையும் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் திரையுலகம்:

மேலும், அவருடைய உடல்நிலை சற்று ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். தற்போது அவருக்கு 58 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தகவல் திரையுலர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஜெயஸ்ரீ விரைவில் குணமாக வேண்டும் என்று வேண்டி வருகின்றனர்.

Advertisement