தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை காட்டில் இருக்கும் யானைகளை வைத்து தான் The Elephant Whisperers என்ற குறும்படம் எடுக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானை குட்டிகள் மற்றும் பொம்மன் பெள்ளி என்ற தம்பதிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட The Elephant Whisperers படம் சிறந்த ஆவணபடத்திற்கான ஆஸ்கர் விருதை தாடிச் சென்றது.
இதனையடுத்து இப்படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெள்ளிக்கு பல இடங்களில் இடங்களில் இருந்து பாராட்டுக்கள் வந்தன. இதனையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் இந்த தம்பதியை நேரில் அழைத்து பாராட்டி 1 லட்சம் காசோலை வழங்கி சிறப்பித்தார். அதற்கு பிறகு இந்த தம்பதி கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மும்பையில் பாராட்டு விழா :
இந்த நிலையில் இவர்களை பாராட்டும் வகையில் மும்பையில் விழா ஓன்று நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டு உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பிய பொம்மனும், பெள்ளியும் இண்டிகோ விமானத்தின் மூலம் ஊர் திரும்பினார். அப்படி இவர்கள் விமானத்தில் பயணிக்கும் போது பொம்மன் மற்றும் பெள்ளி இருவரும் தங்களுடைய விமானத்தில் வருவதை அறிந்து கொண்ட விமானி உடனடியாக எழுந்து வந்து பயணிகளிடம் நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று கூறினார்.
Nice gesture @IndiGo6E ❤️#TheElephantsWhisperers #TNForest #BommanBellie pic.twitter.com/szjojWmlFI
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 24, 2023
விமானத்தில் பயணம் :
இதனால் விமானி என்ன கூறுகிறார் என்று குழப்பத்தில் இருந்த பயணிகளுக்கு அதிச்சியளிக்கும் வகையில் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தின் கலைஞர்கள் 2 பேர் தற்போது நம்மமுடன் பயணித்து வருகின்றனர். இது நமக்கு பெருமையான தருணம். கைதட்டி உறக்கமாக வரவேற்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனையடுத்து பயணிகளும் அவர்களை வாழ்த்தினர். அவர்களுக்கு கைகூப்பி பொம்மனும் பெள்ளியும் தங்களுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
இண்டிகோ நிறுவனம் பாராட்டு :
இந்நிலையில் விமானம் கோவை வந்த பிறகு பயணிகள் வெளியில் வரிசையாக நின்று கொண்டு அவர்களை வரவேற்று செல்பி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். மேலும் இவர்களை பாராட்டிய விடியோவை பகிந்து இண்டிகோ நிருவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிந்து பொம்மனுக்கு பெள்ளிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தது. அதற்கு பிறகு பொம்மனும் பெள்ளியும் கார் மூலம் மீண்டும் நீலகிரிக்கும் சென்று தங்களுடைய வேலையே தொடங்கி விட்டனர். ஆம் மீண்டும் ஒரு குட்டி யானையை இந்த தம்பதி வளர்த்து வருகிறது.
மீண்டும் ஒரு குட்டி யானை :
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டத்தில் தாயை இழந்த குட்டி யானை கிணற்றில் விழுந்து விட்டது. அந்த குடியாணையை மீட்ட வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்க்க அதிகம் முயற்சிசெய்தனர். ஆனால் அவர்களினால் தாய் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அந்த குட்டி யானையை முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுவரப்பட்டு அவற்றினை பாதுகாக்கும் பொறுப்பை பொம்மனிடமும், பெள்ளியிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களும் தங்களின் குழந்தையை போல யானையை பார்த்து வருகின்றனர்.