மருந்துவாங்க உதவி செய்வது போல 1 லட்சத்தை சுருட்டிய போண்டா மணி உதவியாளர் – போலீசில் சிக்கியது எப்படி.

0
327
bonda
- Advertisement -

உதவி செய்வதாக கூறி நடிகர் போண்டாமணியிடம் ஒரு லட்ச ரூபாய் திருடிய நபர் கைதாகி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.இதுவரை இவர் 270 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் கன்னட பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் நடிகர் போண்டா மணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கேஜிப் ராக்கி பாய் கெட்டப்பில் கேப்டன் மகன் – வேற லெவல் Transformation. வைரலாகும் புகைப்படம்

போண்டா மணிக்கு ஏற்பட்ட உடல் ப்ரச்சனை:

மேலும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். அதோடு இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருக்கிறது. மருத்துவ செலவு செய்ய கூட பணம் இல்லாத போண்டா மணி உதவி கேட்டு பேட்டி அளித்து இருந்தார். பின் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் போன் மூலம் தொடர்பு கொண்டு போண்டா மணி நலம் குறித்து விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து இருந்தார்.இதனை அடுத்து போண்டாமணியின் மருத்துவ செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
bonda

போண்டாமணிக்கு உதவிய பிரபலங்கள்:

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி, தனுஷ் உட்பட பல பிரபலங்கள் போண்டாமணிக்கு நிதி உதவி செய்திருக்கின்றனர். அதற்கு போண்டாமணியும் நன்றி தெரிவித்து இருந்தார். சில வாரங்களுக்கு முன் தான் போண்டா மணி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார். தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் போண்டாமணிக்கு உதவி செய்ய வந்த நபர் ஒரு லட்ச ரூபாய் திருடி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

போண்டாமணியின் உதவியாளர்:

அதாவது, போண்டாமணிக்கு உதவியாளராக இருந்தவர் ராஜேஷ் பிருத்திவ். நேற்று போண்டாமணியின் மனைவி வீட்டுக்கு வந்த ராஜேஷ் பிருத்திவியிடம் தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து மருந்து மாத்திரைகள் வாங்கி வருமாறு கூறியிருக்கிறார். ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு ராஜேஷ் பிருத்திவி நகை கடைக்கு சென்று ஒரு லட்சம் ரூபாய்க்கு நகைகளை வாங்கி இருக்கிறார்.

கைதான திருடன்:

பின் தான் ஏடிஎம் கார்டில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடியது போண்டா மணிக்கு தெரியவந்தது. இதனால் போண்டாமணியின் குடும்பமே அதிர்ச்சியானது. இதனை அடுத்து போண்டா மணியின் மனைவி போரூர் போலீசாருக்கு புகார் அளித்திருக்கிறார். பின் போலீசாரும் ராஜேஷ் பிருத்திவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement