கே ஜி எஃப் ராக்கி பாய் கெட்டபில் இருக்கும் கேப்டன் மகனின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல், சரத்குமார், பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.
இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதோடு இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘சகாப்தம்’. இந்த படத்தினை இயக்குநர் சுரேந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சண்முக பாண்டியன் நடித்திருந்தார். இது தான் சண்முக பாண்டியான் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம்.
சகாப்தம் படம்:
இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹா ஹிங்கே என்பவர் நடித்து இருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சுப்ரா ஐயப்பா, ரஞ்சித், தேவயாணி, ஜெகன், பவர் ஐயப்பா, சீனிவாசன், சண்முகராஜன், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தும் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார். ஆனால், இந்த படம் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
சண்முக பாண்டியன் நடித்த படம்:
இதனைத் தொடர்ந்து ‘மதுர வீரன்’ என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்தார். இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியிருந்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, மைம் கோபி, பால சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர். அதேபோல் இந்த படமும் ஹிட் ஆகவில்லை. இதனால் சண்முக பாண்டியன் சினிமாவிற்கு பிரேக் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஷண்முக பாண்டியன் சசிகுமார் இயக்கி வரும் குற்றப்பரம்பரை என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
குற்றப்பரம்பரை படம்:
எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் தான் குற்றப்பரம்பரை. இந்த நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நாவலை படமாக்க தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாலா ஆகியோர் முயற்சி செய்திருந்தனர். ஆனால், முடியவில்லை. தற்போது குற்றப்பரம்பரை நாவலை படமாக்கும் முயற்சியில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் மும்முரமாக களமிறங்கிய இருக்கிறார். இதில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
சண்முக பாண்டியன் புது கெட்டப்:
இதற்காக சண்முக பாண்டியன் அதிகமாக தாடி, முடி வளர்ப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்து சண்முக பாண்டியன் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கே ஜி எஃப் படத்தில் வரும் யாஷ் கெட்டப்பில் இருக்கிறார். பார்ப்பதற்கு அப்படியே ராக்கி பாய்யாகவே சண்முக பாண்டியன் இருக்கிறார். இது தான் இவர் நடிக்க போகும் புதிய படத்தின் கெட்டப்பா! என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.