வடிவேலு கூட இருந்தா தான் பெரிய ஆளா வருவன்னு விவேக் அனுப்பிச்சாரு, ஆனா வடிவேலு – போண்டாமணி கண்ணீர் பேட்டி.

0
149
Bondamani
- Advertisement -

காலில் விழுந்து கெஞ்சியும் வடிவேலு என்னை நெஞ்சில் மிதித்தார் என்று போண்டாமணி கண்ணீருடன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதுவரை இவர் 270 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் வடிவேலு, விவேக் போன்ற பல முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார்கள். இதனிடையே இவர் கன்னட பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

பின்னர் நடிகர் போண்டா மணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அதோடு இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருக்கிறது என்ற தகவல் வெளியானது. இதனால் மருத்துவ செலவு செய்ய கூட பணம் இல்லாமல் போண்டா மணி உதவி கேட்டு பேட்டி அளித்து இருந்தார். இதனை அடுத்து போண்டாமணியின் மருத்துவ செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டது. கடந்த ஆண்டு இறுதியில் தான் போண்டா மணி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார். தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் போண்டாமணி அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய தெரிந்த நண்பர் ஒருவரின் மூலம் தான் ரமேஷ் கண்ணா இயக்கிய சீரியலில் நடிகர் விவேக் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் என்னுடைய நடிப்பை விவேக் பாராட்டி தொடர்ந்து அந்த சீரியலில் நடிக்க அவர் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதன் பிறகு அவருடைய வீட்டிற்கு செல்வேன், வேலைகளை எல்லாம் செய்வேன். அவரும் வாய்ப்புகள் நிறைய வாங்கி தந்தார். அதில் நடித்தும் வந்தேன். அதன் பிறகு சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற போது செந்தில் சாருடைய அறிமுகம் கிடைத்தது.

அப்போது அவருடைய ஷூட்டிங்கில் கவுண்டமணி சாருக்கு கால் எல்லாம் அமுக்கிவிட்டு அவர்கள் கொடுக்கும் காசை வாங்கி வைத்து சாப்பிட்டு வந்தேன். ஆனாலும், விவேக் சாருடன் நட்பு எனக்கு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அப்போது ராஜராஜேஸ்வரி படத்தில் வடிவேலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் போண்டாமணி வேண்டாம் வேற யாராவது போடலாம் என்று சொல்லிவிட்டார். ஆனாலும், இயக்குனர் என்னை வலுக்கட்டாயமாக அந்த படத்தில் நடிக்க வைத்தார். அதில் அவனுடைய காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. இதை பார்த்து இசையமைப்பாளர் தேவா கூட என்னை பாராட்டி இருந்தார். அதன் பிறகு விவேக் வீட்டிற்கு சென்றேன். அவர் இனிமேல் இங்கே வராது என்று சொல்லிவிட்டார். நான் ஏன் என்று கேட்டதற்கு, அவர் படம் பார்த்தேன்.

சினிமா வாய்ப்பு:

சூப்பரா பண்ணியிருக்க, உனக்கு பெரிய ஆளா வரணுமா? வேண்டாமா? என்று கேட்டார். நான் வரணும் என்று சொன்னேன். அப்போது அவர் என்னுடன் இருந்தால் நீ பெரிய ஆளா? வர முடியாது. என்னை விட வடிவேல் காம்பினேஷன் தான் உனக்கு நன்றாக வருகிறது. அதனால் வடிவேலுவை விட்டு விடாதே என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன் பிறகு நான் வடிவேல் கூட்டணியில் படம் பண்ணினேன். ஆனால், அவர் தன்னுடன் நடிக்கும் யாரையும் முன்னேற விடமாட்டார். அவருடன் இருப்பவர்கள் அவர் காலடியில் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார். அவருடன் இருக்கும் போது நான் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். தொடர்ந்து ஐந்து சீசன்களில் அவருடன் நடிக்க முடியாது. திறமைசாலிகளை முன்னேற விடாமல் தடுத்து விடுவார்.

வடிவேலு குறித்து சொன்னது:

கண்ணும் கண்ணும் படத்தில் கூட யார் கேட்டாலும் சொல்லிடாதீங்க என்ற காமெடி காட்சியில் என்னை நடிக்க விடாமல் அவர் தடுத்தார். ஆனால், படத்தின் இயக்குனர் நான் தான் நடிக்க வேண்டும் என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார். அதேபோல் சிங்கமுத்து எனக்கு திருமணம் செய்து வைத்து பல விதங்களில் உதவி செய்திருக்கிறார். இன்னும் என்னை அவர்தான் பார்த்துக் கொள்கிறார். ஒரு முறை பாண்டிச்சேரியில் வடிவேலு- சிங்கமுத்து இருவரும் சேருவது குறித்து கேட்டார்கள். நான் இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அது பேப்பரில் ஹெட்லைன் ஆக வந்தது. இதை பார்த்த வடிவேலு இரவு இரண்டு மணிக்கு போன் செய்து கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டினார். என் ஆபீஸ் பக்கம் வராதே என்று சொல்லிவிட்டார். இருந்தாலும், நான் அடுத்த நாள் அவருடைய ஆஃபீஸ்க்கு சென்றேன். கண்டபடி பேசினார். அவர் காலை பிடித்து கெஞ்சி மன்னிப்பு கேட்டேன். ஆனால், அவர் என் நெஞ்சில் மிதித்து வெளியே போ என்று சொல்லிவிட்டார். அதோடு சரி, அதன் பிறகு இன்னும் அந்த ஆபீஸ் பக்கம் நான் போகவில்லை என்று கூறியிருந்தார்

Advertisement