ஸ்ரீதேவியின் அன்பு கட்டளை.! நிறைவேற்றிய அஜித்.! சீக்ரெட் சொன்ன போனி கபூர்.!

0
649
- Advertisement -

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தீரன் படத்தை இயக்கிய வினோத் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

-விளம்பரம்-

நடிகர் அஜித் மற்றும் ஸ்ரீதேவி மிகவும் நெருங்கிய நண்பர்கலாக இருந்து வந்தனர். நடிகை ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதால் தான் அஜித் அவர்கள் ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்நிலையில் நடிகர் அஜித்துடன் நடிக்கப்போகும் நடிகை ஸ்ரீதேவி, நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நடிகர் அஜித்திடம் கூறியிருந்தாராம்.

- Advertisement -

ஆனால், அது நடப்பதற்குள்ளாகவே ஸ்ரீதேவி இறந்துவிட்டார். இருப்பினும் ஸ்ரீதேவி ஆசைபட்டது போல அவர் இறந்த பின்னும் அவர் ஆசையை நிறைவேற்றியுள்ளார் நம்ம தல. இதுகுறித்து போனிகபூர் தெரிவிக்கையில், எங்களது தயாரிப்பில் அஜித் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று எதார்ச்சியாக தான் கூறியிருந்தார்.

ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போதே நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, தற்போது உள்ள சூழ்நிலையில் சமூகத்துக்கு தேவையான ஒரு படத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி நாங்கள் தேர்ந்து எடுத்த கதைதான் ‘பிங்க்’. அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு மேலும் தொடரும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement