நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து தயாரிப்பாளர் போனி கபூர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார் ஸ்ரீதேவி. தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கண்டனம் என்று பல மொழி படங்களில் கொடி கட்டி பறந்தவர். இவர் 1969 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்து இருந்தார்.
மேலும், திரையுலகில் கடைசி காலம் இளமையை மாறாமல் இருந்த ஸ்ரீதேவி இறப்பதற்கு இறுதி வரை தொடர்ந்து நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் பாலிவூட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரைப் போலவே இவருடைய மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மேலும், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடிகை ஸ்ரீதேவி காலமானார்.
ஸ்ரீதேவி மரணம்:
தன்னுடைய உறவினருடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தான் ஸ்ரீதேவி தன்னுடைய குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். அங்கு இவர் பாத் டப்பில் குளித்துக் கொண்டிருக்கும் போதே நீரில் மூழ்கி இறந்திருக்கிறார் என்று போலீசார் தெரிவித்திருந்தார்கள். இவரின் மறைவு இந்திய திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது என்று தகவல்கள் வெளியாகின.
போனிக்கபூர் பேட்டி:
இருப்பினும் அவரது மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. இன்னொரு பக்கம் இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படுவது குறித்த பேச்சு வார்த்தைகளும் அடிக்கடி சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதோடு ஸ்ரீதேவி இறப்பு குறித்து அவருடைய கணவர் போனிக்கபூர் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் போனி கபூர், துபாய் போலீசார் என்னிடம் ஸ்ரீதேவி இறப்பு குறித்து 24 முதல் 48 மணி நேரம் வரை விசாரணை செய்திருந்தார்கள்.
ஸ்ரீதேவி மரணம் குறித்து சொன்னது:
ஸ்ரீதேவியோட மரணம் இயற்கையானது கிடையாது. அது விபத்தினால் ஏற்பட்ட மரணம். ஸ்ரீதேவி டயட் இருப்பார். அந்த காரணத்தினால் அவர் சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொண்டதில்லை. இதனால் அவர் அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் வருவது என்று சொல்லுவார். அவர் இறப்பதற்கு முன்னாடி எங்களின் குடும்ப மருத்துவ பரிசோதனையில் நீங்கள் உணவில் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுடைய உடலுக்கு ஆரோக்கியம் என்று கூறியிருந்தார். ஆனால், ஸ்ரீதேவி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஸ்ரீதேவி வாழ்கை படம் குறித்து சொன்னது:
அவருடைய இறப்பு எங்களுடைய குடும்பத்திற்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்திருக்கிறது. அதே போல் ஸ்ரீதேவியுடைய வாழ்க்கை வரலாற்று படம் குறித்து நிறைய செய்திகள் வந்திருந்தது. ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் வரை தனிப்பட்ட நபராகவே இருந்தார். பிரைவேசி முக்கியம் என்று நினைப்பவர். அதனால் அவருடைய வாழ்க்கை தனிப்பட்டதாக இருக்கட்டும். நான் உயிருடன் இருக்கும் வரை ஸ்ரீதேவி பயோபிக் படத்தை எடுக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.