நேர்கொண்ட பார்வை சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு போனி கபூர் சொன்ன விஷயம்.!

0
764
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’படத்தின் ரீமேக் என்பது தெரியும். அதில் அமிதாப் பச்சன் மற்றும் டாப்ஸி நடித்திருந்தன.ர் தற்போது தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித்தும் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை இந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் கண்டுள்ளார். இந்த படத்தை பார்த்துவிட்டு பின்னர் பேசிய போனி கபூர், இந்த படம் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த படத்தில் அஜித்தின் நடிப்பு கண்டு தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும்,அஜித்திற்காக மூன்று கதை தயாராக இருக்கிறது என்றும் ஒருவேளை அஜித் சம்மதித்தாள் கண்டிப்பாக அஜித்தை வைத்து இந்தியில் ஒரு படம் எடுப்பேன் என்றும் உறுதி கூறியுள்ளார்போனி கபூர். ஒரு வேலை அஜித் இந்தி படத்தில் நடித்தால் அது அஜித்தின் ரசிங்கர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக அமையும்.

-விளம்பரம்-
Advertisement