சூர்யா மன்னிப்பு கேட்டால் மக்களெல்லாம் துடி துடித்து விடுவார்கள் என்று நடிகர் போஸ் வெங்கட் கூறிய தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த ஜெய்பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் இருளர், பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையை வெட்ட வெளிச்சமாக காட்டி இருக்கிறது. இந்தப்படம் பல தரப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருந்தாலும் சில சமூகத்தினரிடையே சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அதிலும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஜெய் பீம் படத்தில் வன்னியர் இன மக்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி வன்னியர் சங்கம் மற்றும் இளைஞர்களை படத்திற்கு எதிராக தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட்டுகிறார் என்றும் கூறிவருகிறார்கள். மேலும், இந்த பிரச்சனை இப்படியே நீண்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் அவர்கள் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பது, இன்று வரைக்கும் என் ஒரு வருட சாப்பாட்டில் 2டி, ட்ரீம் வாரியர்ஸ் என அவர்களின் 3 செக்காவது இருக்கும். நான் அவர்களிடம் தான் மன்னிப்பு கேளுங்கள் என பேசிக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய கருத்தும் அது தான் என்பதை சொல்லி கொண்டே இருக்கிறேன். இந்த பிரச்சினையை முடிக்க வேண்டுமே தவிர இழுத்துக்கொண்டே போக கூடாது. இதை சூர்யா, அன்புமணி நினைத்தால் உடனடியாக முடித்து விடலாம். அதோடு சூர்யா பேசுவது அவருக்காக இல்லை அவருடைய மக்களுக்காகத் தான் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.
ஜெய்பீம் படத்தை விழுப்புரம் என்பதால் மக்களை வைத்து சித்தரித்து பண்ணினோம் என்றால் அந்த விழுப்புரத்தில் 40 தியேட்டர்களில் யார் படம் பார்க்க வருவாங்க? விழுப்புரம், பாண்டிச்சேரி சுற்றி அத்தனை மாவட்டங்களும் உள்ள படம் சூப்பர் ஹிட். எல்லாமே வன்னியர்கள் தான் பார்த்தார்கள். உங்களுடைய படத்திற்கு சினிமா உலகத்தை வாழ வைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படவில்லையானாலும் என்னை மன்னிச்சிடுங்க என்பதில் என்ன குறைச்சல் ஆகிவிடப்போகிறது. மன்னிப்பு கேட்டுவிட்டால் தேவையில்லாத தலைவர்களும் ஒதுங்கிவிடுவார்கள்.
இதையும் பாருங்க : விவாரத்துக்கு பின் பல பதிவுகளை போட்டு வந்த சமந்தா, ஆனால், நாக சைதன்யா போட்ட முதல் பதிவை பாருங்க.
அதுவும் மக்கள் எங்க சூர்யா எங்களுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று கூட்டம் கூட்டமாக போவார்கள். இதெல்லாம் ப்ளஸ் தானே. அதோடு சூர்யா மன்னிப்பு கேட்டால் மக்கள் கதரி துடிதுடித்து போவார்கள். நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் டுவிட்டர், பேஸ்புக் என எதுவாக கேட்டாலும் வன்னிய மக்களை என்னுடைய திரைப்படம் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று சூர்யா கேட்டுவிட்டால் தலைவர்களுக்கெல்லாம் இங்கு வேலையே கிடையாது. அவங்கவங்க வேலையை பார்த்து போய் விடுவார்கள் இந்த கலவரமும் வெடிக்காது என்று கூறி இருக்கிறார்.