விமர்சகர்கள் வியாபாரத்துக்குள் நீங்க ஏன் மாட்டிக்கிறீங்க? ஆவேசத்தில் போஸ் வெங்கட் சொன்ன விஷயம்

0
148
- Advertisement -

கங்குவா படத்தின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து போஸ் வெங்கட் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கங்குவா.

-விளம்பரம்-

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு கங்குவா படம் குறித்து சோசியல் மீடியாவில் பயங்கரமான நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

- Advertisement -

கங்குவா படம்:

காரணமே இல்லாமல் சூர்யாவையும், படத்தையுமே மோசமாக விமர்சித்தும் திட்டி இருக்கிறார்கள். இதற்கு சிலர் கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஜோதிகா, கங்குவா படத்திற்கு சப்போர்ட் செய்து பதிவு போட்டு இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், விமர்சகர் சொன்னால் தான் நீங்கள் டிபன் சாப்பிடுவீர்களா? அவர்கள் சொன்னால் தான் உங்களுக்கு பெண் பார்க்க போவீர்களா? அவர்கள் சொன்னால் தான் நீங்கள் வேலைக்கு போவீர்களா? இதன் மூலம் அவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

போஸ் வெங்கட் பேட்டி:

அவர்கள் சொல்லும் வார்த்தையை கேட்டு நீங்கள் ஏன் நடக்கிறீர்கள்? அவர்கள் குழிக்குள் விழ சொன்னால் நீங்கள் விழுந்து விடுவீர்களா? ஒரு படம் பிடிக்கணுமா? பிடிக்கலையா? என்பதை மக்கள் நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். விமர்சகர்கள் சொல்வதைக் கேட்டு படத்தை பார்க்கப் போவது ரொம்ப தவறு. அவர்கள் பணத்திற்காக நல்ல படத்தையும் நல்லா இல்லை என்று சொல்வார்கள், நன்றாக இல்லாத படத்தையும் நன்றாக இருக்கு என்று சொல்வார்கள். அவர்கள் இதன் மூலம் சம்பாதிக்கும் யுத்தியை தான் பயன்படுத்துகிறார்கள்.

-விளம்பரம்-

சினிமா பற்றி சொன்னது:

அதை நம்பி நீங்கள் தான் குழிக்குள் நாசமாக போகிறீர்கள். விமர்சகர்கள் சொல்வதைக் கேட்டு எந்த படத்தையும் பார்க்க போகாதீர்கள். உங்களுக்கு நீங்கள் தான் விமர்சகர். நீங்கள் படத்தை பார்த்து உங்களுக்கு என்ன தோன்றியதோ அதை சொல்லுங்கள். நீங்கள் தான் விமர்சனம் செய்யணும். சினிமா என்பது மக்களுக்காக உருவாக்கப்பட்டது. மக்கள் தான் படத்தை பற்றி தீர்மானிக்க வேண்டுமே தவிர விமர்சகர்கள் கிடையாது.

ப்ளூ சட்டை மாறன் குறித்து சொன்னது:

ஒருவர், ப்ளூ சட்டை மாறன் சொன்னால் தான் படத்தை பார்க்க போவேன் என்று சொல்கிறான். அவன் சொல்லி நீ ஏன் போக வேண்டும்? அவனுக்காக நீ வாழ்கிறாயா? நீங்கள் படத்தை போய் பார்த்துவிட்டு சூர்யாவை திட்டணுமா திட்டுங்கள், பாராட்டணுமா பாராட்டுங்கள். சிவாவை திட்டணுமா திட்டங்கள், பாராட்டணும் என்றால் பாராட்டுங்கள். எதுவாக இருந்தாலும் நீங்கள் முடிவு செய்யுங்கள். விமர்சகர்களின் வியாபாரத்திற்கு நீங்கள் ஏன் மாட்டிக் கொள்கிறீர்கள்? என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement