‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ல ஆர்யாவின் தங்கையாக நடித்த நடிகையா இது. இப்போ என்ன செய்றார் தெரியுமா ?

0
3802
monisha
- Advertisement -

தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது முழுநீள காமெடி படமாக உருவான இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம், மொட்டை ராஜேந்தர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஷகீலா,ஸ்வாமிநாதன்,விஜயலக்ஷ்மி என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தார்கள் இந்த படத்தில் நடிகர் ஆர்யாவின் தங்கையாக நித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மோனிஷா.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-12.png

இந்த படத்தில் இவரை பார்த்தபோதே இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் பலருக்கும் தோன்றி இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆம், இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வசந்த் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்த இவர் அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியிருக்கிறார்.

இதையும் பாருங்க :’ இது ரத்த பூமி வாத்தியாரே’ – ட்விட்டரில் இணைந்த பசுபதியை வாத்தியார் மீம் போட்டு வரவேற்ற ஆர்யா.

- Advertisement -

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. தற்போது கேம் ஷோக்கள் பிரபலங்களின் விழாக்கள், பல்வேறு பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். இறுதியாக ஜெயா டிவியில் ஒளிபரப்பான கில்லாடி ராணி என்ற கேம் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். மேலும், இவருக்கு திருமணமும் ஆகிவிட்டது.

This image has an empty alt attribute; its file name is image-13.png

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அதுவும் இவரது திருமணம் காதல் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் தான் இவரது ஐந்தாம் வருட திருமண நாள் சென்றுள்ளது அப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது கணவருக்கு திருமணநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் மோனிஷா. சமீபத்தில் இவரது ஒரு சில புகைப்படங்களை இவரது சமூக வலைதளத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது.

-விளம்பரம்-
Advertisement