ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த மாதம் 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் தொடர்பாக பல மீம்கள் வைரலானது.
இதையும் பாருங்க : உங்களால பண்ண முடியுமா ? இதை கூட ஸ்கேல் வைத்து அளந்து காண்பித்த மியா கலிஃபா
அதிலும் கடந்த சில நாட்களாக ‘வாத்தியார்’ மீம்ஸ் படு வைரலானது. வாத்தியாரே ஏன் நடந்து போரிங்க வாங்க சைக்கிள்ல போலாம்… எனும் வரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் பல விதமான மீம்களை போட்டு கலாய்த்து வந்தனர். அதே போல இந்த படத்தில் நடித்த பலரும் தங்கள் பங்கிற்கு வாத்தியார் மீம்ஸ் போட்டு காலாய்த்தனர்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த பசுபதியை வரவேற்கும் விதமாக வாத்தியார் மீம்ஸ் போட்டு வரவேற்றுள்ள ஆர்யா, வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே பாக்சிங் விட ரத்த பூமி உன்னோட பெயரில் இங்க நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான் தாண்டா நீ உள்ள வந்த பாத்தியா உன் மனசு மனசு தான் வா வாத்தியாரே இந்த வேர்ல்ட் உள்ள போலாம்’ என்று பதிவிட்டுள்ளார்.