பிக் பாஸ் “Title” யார் வெல்வார்..! தொடமுடியாத உயரத்தில் இருக்கும் போட்டியாளர்.!

0
746
Bigg-Boss
- Advertisement -

பிக் பாஸ் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது இன்னும் 7 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியேறி விடுவார். அந்த நபர் கண்டிப்பாக ஐஸ்வர்யாவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-

bigg boss

- Advertisement -

அடுத்த இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் நிகழ்ச்சியை இன்னும் 5 நாட்கள் நீட்டஉள்ளனர் என்ற சில தகவலும் வெளியாகி இருந்தது. அப்படி இருக்கையில் இன்னும் 2 வாரத்தில் மேலும் 2 நபர்கள் வெளியேறிவிட்டால் இறுதி போட்டிக்கு 4 நபர்கள் செல்வார்கள்.

இந்நிலையில் இறுதி போட்டிக்கு செல்ல போகும் நபர் யார் என்ற ஒரு கனக்கடுப்பை பிரபல முன்னணி பத்திரிக்கை ஒன்று நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பில் ரித்விகாவிற்கு தான் மற்ற போட்டியாளர்களை விட மிகவும் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும் போது ரித்விகாவிற்கு பதிவாகியுள்ள வாக்குகள் நெருங்கமுடியாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது.

-விளம்பரம்-

Bigg-Boss

சமீபத்தில் அந்த பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ள புள்ளி பட்டியலில் ரித்விகா தான் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்று 42 % பேர் வாக்களித்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக மும்தாஜிற்கு 18% சதவீதம் தான் வாக்குகள் பதிவாகியுள்ளது. எனவே, ரித்விகாவிற்கு தான் மிக பெரிய ஆதரவு இருப்பதாக தெரிகிறது.

சென்ராயன் இருந்த வரையில் ரித்விகா மற்றும் சென்ராயன் ஆகிய இருவரில் ஒருவர் தான் டைடல் விண்ணராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால்,தற்போது சென்ராயன் இல்லாததால் ரித்விகாவிற்கு போட்டியாக நிற்க கூட எந்த ஒரு போட்டியாளரும் இல்லாமல் இருக்கின்றனர். மேலும், விஜயலட்சுமி, ஜனனி,பாலாஜி ஆகியோருக்கு தான் மக்களின் ஆதரவு மிகவும் கம்மியாக இருக்கிறது என்று இந்த கணக்கெடுப்பின் மூலம் நன்றாக தெரிகிறது.

Advertisement