ஹோட்டலில் முறைத்து பார்த்த விஜய் ரசிகர்- எழுந்து சென்று போஸ் செய்துள்ள செயல்

0
178
- Advertisement -

விஜய் ரசிகர்கள் குறித்து போஸ் வெங்கட் அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே போஸ் வெங்கட் விஜய்யின் அரசியலை விமர்சித்து வருவது நாம் அறிந்ததே. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

அதோடு வருகின்ற 2006 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருக்கிறார். அதேபோல் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சிக்கொடியை ஏற்றி, உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி இருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி. சாலையில் தவெக கட்சியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

- Advertisement -

தவெக முதல் மாநாடு:

மேலும், மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய் மறக்கச் செய்தது. அதோடு இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்திருந்தார்கள். இதைப் பார்த்த விஜய் எமோஷனல் ஆகி கண்கலங்கி இருந்தார். அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய்யின் உடைய பேச்சும் அனல் பறக்க இருந்தது. மாநாட்டில் விஜய் பேசியதற்கு பலரும் பலவிதமாக பாராட்டியும் விமர்சித்தும் இருந்தார்கள்.

போஸ் வெங்கட் பதிவு:

அந்த வகையில் இயக்குனரும், நடிகரும், திமுகவை சேர்ந்தவரும் ஆன போஸ் வெங்கட் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில், ‘யப்பா… சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு ‌… எழுதிக் கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன் ‌… முடிவு??? பாப்போம்’ என்று பதிவிட்டு இருந்தார். அதேபோல் சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், போஸ் வெங்கட் விஜயின் அரசியல் வருகையை கடுமையாக மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.

-விளம்பரம்-

ரசிகர்கள் ஆதங்கம்:

மேலும், போஸ் வெங்கட் அவர்கள், விஜய்யை இப்படி விமர்சனம் செய்தது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல், விஜய்யின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அவரை கடுமையாக கண்டித்தும், திட்டியும் இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த போஸ் வெங்கட், ‘ரோட்ல போகும்போது ஒரு சின்ன பையன் முறைச்சுட்டு போவான். அவன் முறைச்சிட்டு போகும்போதே அவன் விஜய் ஃபேன் ஆக இருப்பான் என்று எனக்கு தெரியும். ஒருமுறை ஏதோ ஹோட்டலுக்கு போனப்ப கூட ஒருத்தர் பயங்கரமா என்கிட்ட ரியாட் பண்ணாரு. அதற்குப் பிறகு அவர்கிட்ட எழுந்து போய், என்ன இப்படி ரியாட் பண்றீங்க, நீங்க விஜய் ஃபேனா என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்தார். அதெல்லாம் இருக்கும்.

போஸ் வெங்கட் பேட்டி:

அப்புறம் நான் அவர்கிட்ட, அரசியல் களம் என்பது வேறு. பர்சனலா விஜய்க்கு எப்படி நீங்க ரசிகரோ அதே மாதிரி நானும் ரசிகர் தான். அவருடைய பயங்கர ரசிகன். முதல் ஷோ படம் பார்ப்பேன். அரசியல் களம் என்பது வேறு. நான் இப்போ திமுக வில் இருக்கிறேன். அங்கும் எனக்கு எதிரான ஒரு செயல் நடந்தால் இதே மாதிரி கேள்வி கேட்பேன். இந்த புரிதல் உங்களுக்கு வேண்டும் என்று சொன்னேன். இந்த மாதிரி எல்லாரும் சில தவறுகளை வெளிப்படையாக சொல்லிக் காட்டுவது, யாருக்கு நல்லதோ இல்லையோ அதனால் ஒரு பெரிய கூட்டம் பாதிப்பு அடையப்போவது உண்மை. அவங்களுக்கு நம்ம செய்ய வேண்டிய கடமை உண்டு அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். அது எந்த துறையாக இருந்தாலும் சரி என்று கூறியுள்ளார்.

Advertisement