பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் வசூல் செய்து இருக்கிறது. மேலும், இவர் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல இவரது படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியாகியிருக்கிறது.
இப்படி இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவது ரசிகர்களை கொண்ட ஷாருக்கான் சித்தார்த் இயக்கத்தில், தயாரிப்பாளர் யாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பதான்” . இப்படத்தில் சால்மன் கான், ஹிர்திக் ரோஷன், தீபிகா படுகோன், ஜான் ஆபிராம் போன்ற பாலிவுட் சினிமாவில் பல முன்னி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி “பதான்” திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடப்பட்டது. இப்படியிருக்கும் போது இப்பாடலினால் “பதான்” படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதாவது இடத்தில் நடிகை தீபிகா படுகோன் காவி நிறத்தில் படு கவர்ச்சியாக உடை அணிந்தும் கதாநாயகனான ஷாருக்கான் பச்சை நிறம் அணிந்தும் பாடலில் நடனமாடி இருந்தனர். இந்த ஒரு பாடலினால் “பதான்” திரைப்படமே தோல்வியுறும் நிலைமை ஏற்ப்பட்டது.
அதாவது இப்பாடலில் பிரபல நடிகையான தீபிகா படுகோன் காவி நிறமுடன் கவர்ச்சி உடை அணிந்து நடித்திருப்பது இந்தியாவின் கலாச்சரத்திற்கு எதிரானது என்றும், நடிகர் ஷாருக்கான் பச்சை நிறத்தில் பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிடுவதாகவும் குற்றம் சாட்டி படத்தினை எதிர்க்கும் வகையில் “பாய் காட் பதான், ஷாருக்கான், தீபிகா படுகோன் என்று ஹாஸ்டகுகளின் மூலம் ட்ரெண்டாக்கி ரசிகர்கள் தங்களுடடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் “பதான்” திரைப்படம் நடிகர் ஷாருக்கானின் படம் என்பதினால் வேண்டுமென்றே இந்த பிரச்சனையை உருவாக்குகிறார்கள் என்றும். இந்த பாடலில் தீபிகா படுகோன் பல நிறங்களில் கவர்ச்சி உடையில் நடித்திருக்கிறார் அப்படியிருக்கும் போது இது திட்டமிட்டு நடிகர் ஷாரூக்கானிருக்கு எதிராக செய்யப்படும் சதி என்று நடிகர் அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இதனை போன்ற பாய் காட் பிரச்சாரத்தினால்தான் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான அமீர்கான் நடித்திருந்த “லால் சிங் சத்தா மற்றும் நடிகர் அக்ஷ்ய குமார் நடித்திருந்த “ரக்ஷா பந்தன் போன்ற திரைப்படங்கள் தொடக்கத்திலேயே படும் தோல்வியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.