பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை புவனேஸ்வரி. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே சில சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் பல பேருடன் இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் இவர் சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் நடிகை புவனேஷ்வரி செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் தான் சினிமாவிற்குள் வந்தது எப்படி? அதற்கு பிறகு தான் சந்தித்த சில பிரச்சனைகள் பற்றியும் பேசியிருந்தார்.
சிரியலில் இருந்து சினிமா :
அவர் கூறுகையில் “நான் சினிமாவிற்குள் விருப்பப்பட்டு வரவில்லை, என்னுடைய குடும்பத்திற்கும் சினிமாவில் பின்புலம் கிடையாது. எல்லோரும் சினிமாவிற்கு வந்த பிறகு சீரியலுக்கு வருவார்கள் ஆனால் நான் சீரியலுக்கு வந்த பிறகு தான் சினிமாவில் நுழைந்தேன். என்னுடைய முதல் படமே தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனரான சங்கர் அவர்களுடன் “பாய்ஸ்” என்ற படத்தில் நடித்தேன். நான் வந்தது சிறிய கதாபாத்திரம் என்றாலும் அது மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரம். நான் அந்த காட்சியில் நடிப்பதற்கு தயங்கி முதல் படமே இப்படி இருக்கிறதே என இயக்குனர் சங்கரிடம் கேட்டேன். அதற்கு அவர் இந்த படத்தில் 5 பாய்சுடன் நீங்க நடிக்க போகிறீர்கள் ஆனால் அவர்களில் ஒருவர் விறல் கூட உங்களின் மீது படாது என்று கூறினார். நானும் இது என்னுடைய முதல் படம் என்பதினால், இயக்குனர் ஷங்கர் மிகப்பெரிய இயக்குனர் என்பதனாலும் ஒப்புக்கொண்டு நடித்தேன் என கூறினார்.
அம்மாவின் ஆசையினால் தான் நடிக்க வந்தேன் :
நான் சீரியலின் நடிப்பதற்கு முன்னர் ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தேன். அந்த விளம்பரத்தை பார்த்த “தீபம்” என்ற சீரியலின் இயக்குனர் என்னிடம் போன் செய்து கேட்டிருந்தார் நீங்கள் இந்த சீரியலில் நடிக்கலாமே என. எனக்கு விருப்பமில்லாத காரணத்தால் நான் மறுத்துவிட்டேன். ஆனால் தொடர்ந்து அவர் வற்புறுத்தினார் இதைப் பார்த்த என்னுடைய தாய் சீரியல் தானே நம்முடைய குடும்பத்தில் யாருமே சினிமாவில் நடிக்கவில்லை இது உன் மூலமாக நிறைவேறட்டும் என்று கூறினார். அவருக்கு சினிமா மீது ஈடுபாடு இருந்தது அதனால் நானும் நடிக்க சென்றேன்.
சீரியலுக்கு பிறகுதான் பிரச்னை :
சீரியல் தொடங்கி சில வாரங்களிலேயே பல சிரியல்களில் இருந்து எனக்கு வாய்ப்பு வந்தது. நான் சீரியலுக்கு வருவதற்கு முன்னர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் நான் சீரியலில் இணைந்த பிறகு எனக்கு பல பிரச்சனைகள் வந்தது பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன், ஒரு பெண்ணிற்கு சினிமாவில் என்னென்ன பிரச்சனைகளை வருமோ அனைத்து பிரச்சனைகளும் எனக்கும் வந்தது.
சர்ச்சையான விஷியங்கள் :
அதாவது மற்ற துறைகளில் பெண்கள் இருக்கின்றன ஆனால் சினிமா என்று வரும்போது அது பல இடங்களில் ஒளிபரப்பப்படும் அப்படி ஒளிபரப்பப்படும் போது ஏற்படும் சில சர்ச்சையான விஷயங்கள் அந்த பெண்ணின் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த தாக்கத்தை என் மீதும் ஏற்படுத்தியது. எனக்கு அப்பா கிடையாது அமமா மட்டும் தான் அவரும் வீட்டு பெண் என்பதினால் மிகவும் மனமுடைந்து விட்டார். ஆனால் எனக்கு இந்த விஷியங்களை போக போக தெரிய ஆரம்பித்தது. நான் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர என்னுடைய குடும்பம் உதவியாக இருந்தது.
பாய்ஸ் படம் பற்றி :
மேலும் நான் “பாய்ஸ்” படத்தில் அந்த காட்சியில் நடித்தற்க்காக வருந்தவில்லை அது நடிப்பு. நான் சினிமாவில் ராஜாவாக நடிக்கிறேன் என்றால் நான் உண்மையான ராஜாவாகி விட முடியாது. அதே போல ஒரு பிச்சைக்காரனாக நடிக்கிறேன் என்றால் உண்மையில் அப்படி ஆவதில்லை அப்படியிருக்க நான் அந்த விஷியத்தை நடிப்பாகத்தான் பார்த்தேன். சொல்லப்போனால் பாய்ஸ் படத்திற்கு பிறகு நான் வேற லெவலுக்கு சென்று விட்டேன். நான் தமிழ் சினிமாவில் நடித்ததை விட தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு இந்த படத்தின் மூலம் கிடைத்து என பல விஷியங்களை பகிர்ந்து கொண்டா நடிகை புவனேஸ்வரி.