சமந்தா மற்றும் எமியின் காதல் தோல்விக்கு இவர்கள் தான் காரணமா ? இவர் பச்சையா குத்தி இருக்காரே.

0
602
samantha
- Advertisement -

நடிகை சமந்தா மற்றும் எமி ஜாக்சன் வாழ்க்கையில் காதல் ஏற்பட்டதற்கு ஒருவர் தான் காரணம் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

பின் சமந்தாவும், நாகா சைதன்யாவும் பிரிய போகிறோம் என்று தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இருந்தாலும் சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஸ்பா படத்தில் நடிகை சமந்தா ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

எமி ஜாக்சன் திரைப்பயணம்:

அதேபோல் ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் எமி. இவர் மாடல், நடிகையுமானவர். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

எமி- ஜார்ஜ் திருமணம்:

இதனிடையே நடிகை எமி இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயோட்டுவை காதலித்து வந்தார். ஆனால், திருமணம் செய்து கொள்ளாமலே நடிகை எமி கர்ப்பமானார். பின் எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறகு எமி-ஜார்ஜ் இருவரும் தங்கள் காதலை முறித்து கொண்டனர். இந்நிலையில் ஒரு காலத்தில் நடிகை சமந்தா மற்றும் எமியின் காதலுக்கு பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் மட்டும் தான் காரணமாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க,

-விளம்பரம்-

சமந்தாவின் காதலுக்கு காரணம் :

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தான். ஏன் என்றால், தமிழில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தை யாராலும் மறக்க முடியாது. இந்த படத்தை தெலுங்கில் ஏன் மாய சேசாவே என்கிற பெயரில் கௌதம் வாசுதேவ் எடுத்து இருந்தார். இதில் நாகசைதன்யா, சமந்தா நடித்து இருந்தார்கள். பின் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதற்குப் பிறகு தான் திருமணம் இருவரும் செய்து கொண்டார்கள்.

எமியின் காதல் முறிவுக்கு காரணம் :

கடைசியில் இவர்களின் காதல் பிரிவில் முடிந்தது. இதே போல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தியில் பிரதீக் பாபர், ஏமி ஜாக்சன் நடித்து இருந்தார்கள். இது ஏக் தீவானா தா என ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடித்த பிரதீக் பெயரை எமி ஜாக்சன் தன் கையில் பச்சை குத்தியிருந்தார். ஒரு கட்டத்தில் இதுவே அவர்களுடைய காதல் முறிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement