இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.
இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சமீபத்தில் கூட வசந்த் அண்ட் கோ உரிமையாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் உயிரிழந்தார்.
அதே போல தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த்னர். இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகரான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் சிவ குமாரின் குடும்பத்தினரான சூர்யா, கார்த்திக் மற்றும் அவரது பிள்ளைகள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்படி ஒரு நிலையில் இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சிவகுமாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது உண்மை தான் என்றும் ஆனால், அவருக்கு கொரனோ தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவரும் அவரது குடும்பத்தாரும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.