‘பார்த்திபன் சாருக்கு நன்றியோடு இருப்பேன்’ – தான் நடித்த முதல் படத்திற்கு கிடைத்த Response. கண்ணீர் வடித்த பவி டீச்சர்.

0
364
parthiban
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வருகின்றது. இதையடுத்து பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஒரே ஆண்டில் ராதிகாவை பிரிந்த பிரதாப்பின் இரண்டாம் மனைவி யார் தெரியுமா ? அவர்களின் 31 வயது மகளை பார்த்துள்ளீர்களா ?

பிரிகிடா பற்றிய தகவல்:

மேலும், இந்த படத்தில் பிரிகிடா தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் பிரகிடா நடித்து இருப்பார். இவர் ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலம் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார். மேலும், நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல் முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார் பிரகிடா.

-விளம்பரம்-

பிரிகிடா நடித்த படங்கள்:

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் பிரகிடா நடித்து அசத்தியிருப்பார். பின் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார். அதோடு இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மேலும், இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவின் நிழல் படம்:

தற்போது இரவின் நிழல் படத்தில் இவர் தான் மெயின் லீடாக நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய சென்றார். ஆனால், இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு வழங்கிவிட்டார் பார்த்திபன். இந்த படத்தில் முழு முயற்சியும் போட்டு நடித்திருக்கிறார் பிரிகிடா. 19 நொடிகளில் ஓடிக்கொண்டே ஆடையை மாற்றி நடிக்க வேண்டிய சூழல். நிர்வாண காட்சியில் பிரிகிடா நடித்தது பலரையும் வியப்படைய செய்து இருக்கிறது.

பிரிகிடா அழ காரணம்:

மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியே வரும் ரசிகர்கள் படத்தினையும், பார்த்திபனையும் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரகிடா திரையரங்கிற்கு இன்று காலை வந்து இருக்கிறார். இவரை பார்த்து மக்கள் கொடுத்த ஆதரவினை கண்டு பிரகிடா அழுது விட்டார். மேலும், இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு பார்த்திபன் சாருக்கு நன்றியுடன் இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement