பிரபல நடிகரின் புதிய அவதாரம் ! மூன்று கதாப்பாத்திரம்…பல மணி நேர ப்ரோஸ்தடிக் மேக்கப் !

0
10857

ஜெயம்கொண்டான்,இவன் வேற மாதிரி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஆர். கண்ணன் தற்போது நடிகர் அதர்வா வை வைத்து பூமராங் என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஆர்.ஜே .பாலாஜி,உபன் படேல் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு முக்கிய தோற்றத்தில் இயக்குனர் மணிரத்னம் நடிக்குள்ளார். படத்திற்கு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் இசையமைகிறார்.

Boomerang-Movie-Posters

நடிகர் அதர்வா பிரபல நடிகர் முரளியின் மகன் என்பதை விட சில தரமான படங்களில் நடித்து தனக்கென்று ஒரு நல்ல பெயரை எடுத்துள்ளனர். இவர் நடித்த ஈட்டி, சண்டி வீரன் போன்ற நல்ல படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்தார். தற்போது பூமராங் படத்தின் மூலம் தனது நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார் அதர்வா. இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க போகிறாராம் அதற்காக ஒரு நாளைக்கு பல மணி நேரம் மேக்கப் போட்ட பின்பே நடிப்பை தொடங்க முடிக்கிறதாம்.

இதுபற்றி அந்த படத்தின் இயக்குனர் கண்ணன் தெரிவிக்கையில் பூமராங் படத்தில் அதர்வா மூன்று வேடங்களில் நடிக்கிறார்.இதற்காக அந்த மூன்று காதாபதிரத்தின் வெவ்வேறு தோற்றத்திற்காக அவருக்கு மேக் அப் தேவை பட்டது. இதனால் நாங்கள் மேக் அப் கலையில் புகழ் பெற்ற ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா அணுகினும்.இவர்கள் இருவரும் பத்மாவத், நவாசுதீன் சித்திக் நடித்த மாம், அமிதாப் பச்சன் நடித்த 10ஆகிய படங்களில் தங்களது சிறப்பான மேக்கப்பால் புகழ்பெற்றவர்கள் .மேலும் இவர்கள் ப்ரோஸ்தடிக் எனப்படம் அச்சி முறை மேக் அப் பிற்க்கு மிகவும் பேர் போனவர்கள்.

Boomerang

ப்ரோஸ்தடிக் எனப்படம் மேக் அப்பை இந்த் படத்தில் பயன்படுத்தியுள்லோம்.அதற்காக அதர்வாவிற்கு ஒரு நாளைக்கு அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார்.மேலும் மேக் அப் கலைஞர்கள் இருவரும் 2 நாட்கள் உழைத்து இந்த படத்திற்கு தேவையான தோற்றத்தை உருவாக்கி கொடுத்தார்கள்.மேக் அப் போடும் போது அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை தனித்துவமான முறையில் அளவெடுத்து சென்றனர். ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள்.இதனால் அதர்வா மூச்சி விட கூட முடியாது அதனால் மூச்சி விடுவதற்கு மட்டும் ஒரு குழாய் போறுத்தப்பட்டது.அந்த அளவிற்கு அதர்வா இந்த படத்திற்காக கஷ்டப்பட்டுள்ளார் என்று இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார்.