16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..! தளபதி 62 பற்றி கசிந்த தகவல்!

0
921
vijay

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், சமீப காலமாக அவரது படங்களில் அரசியல் குறித்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘மெர்சல்” படத்தில் கூட அரசியல் சார்ந்த வசனங்களை பேசியதால், அந்த படம் பல்வேறு பிரெச்சனைகளை சந்தித்தது. தற்போது விஜய் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் “விஜய் 62” படத்தில் நடித்து வருகிறார்

vijay

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் கூட இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. மேலும் இந்த படம் அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்கும் என்று சமீப காலமாக வந்த தகவலில் இருந்து உறுதியானது . இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த “தமிழின்” படத்தில் நடித்த கதாபாத்திரத்தை போன்று இந்த படத்திலும் நடித்திருக்கிறாராம்.

விஜய் நடிப்பில் 2002 ஆண்டு வெளியான “தமிழன்” படத்தில் சமூக அக்கறை கொண்ட ஒரு வழக்கறிஞ்சராக நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு அப்படிபட்ட கதாபாத்திரத்தில் விஜய் நடித்ததே கிடையாது. தற்போது இத்தனை ஆண்டு இடைவேளைக்கு பிறகு “விஜய் 62” படத்தில் வழக்கறிஞ்சராக நடித்துள்ளாராம் விஜய்.

-விளம்பரம்-

tamizhan

ஏற்கனவே இந்த படத்தில் நடித்துள்ள வில்லன் நடிகர் ராதாரவி தெரிவிக்கையில், இந்த படத்தில் தான் ஒரு அரசியல் வாதியாக நடித்திருப்பதாகவும், தன்னை எதிர்த்து விஜய் வருவார் என்றும் தெரிவித்திருந்தார். எனவே விஜயும் ஒரு அரசியல்வாதியாக தான் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கபட்டிருந்தது. ஆனால் தற்போது விஜய் இந்த படத்தில் வழக்கறிஞ்சராக நடித்திருக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Advertisement