ஓ…எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு போங்க.! பிக்பாஸ் வின்னர் இவர்தான்.! பிரபல இயங்குனர் அதிரடி.!

0
99
Bigg-Boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 66 நாட்களை கடந்து சென்றுள்ளது. இன்னும் 9 பேர் மட்டும் மீதமுள்ள நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) இந்நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல நடிகை விஜயலக்ஷ்மி பிக் பாஸ் வீட்டின் நுழைந்துள்ளார்.

Bigg-Boss-Vijayalakshmi

திரைப்பட நடிகையான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுதற்கு முன்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாயகி’ என்ற தொடரில் நடித்து வந்தார். பின்னர் சில பல காரணங்களால் அந்த தொடரில் இருந்து விலகினார். பிக் பாஸ் வீட்டின் முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியான இவர் தான் பிக் பாஸ் டைட்டிலை அடித்து செல்வார் என்று ‘தமிழ் படம்’ படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன் டீவீட் செய்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இயக்குனர் சி எஸ் அமுதன் ‘என்னுடைய தோழி விஜயலக்ஷ்மி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளாரா? அப்போது மற்ற போட்டியாளர்கள் வீட்டுக்கு போக வேண்டியது தான், அவர்(விஜயலக்ஷ்மி) தான் வெற்றி பெறுவார் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை விஜயலக்ஷ்மி வேறு யாரும் இல்லை தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் தான் நடிகை இவர். அதே போல இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கிய ‘இரண்டாவது படம்’ என்ற படத்தில் நடிகை விஜயலக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சில பல காரணங்களால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement