கடந்த சில நாட்களாக பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தான் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவம் போன்றே சென்னையில் பல பெண்களிடம் கைவரிசை காட்டிய கால் டாக்ஸி ஓட்டுனர் தற்போது போலீசில் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகபட்டினத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநரான சுந்தர் என்ற நபர் தன்னை ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளதாக புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார் அவர் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த வெளிபாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் என்பது தெரியவந்தது. சுந்தரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த விசாரணையின் பெயரில் தீவிர தேடுதல் நடத்திய போலீசார் சுந்தர் சென்னையில் பதுங்கி உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் அவரை சென்னையில் கைது செய்த போலீசார் அவர் மீது பாலியல் தொந்தரவு ,பெண்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர், அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் ஆய்வு நடத்தியதில் பல திடுக்கிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் கிடைத்துள்ளது. சுந்தர் ஏராளமான பெண்களுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் அந்த செல்போனில் இருந்துள்ளது.
நாகப்பட்டினம் மட்டுமின்றி சென்னை திருவாரூர் போன்ற பல பகுதிகளில் இந்த சுந்தர் பல பெண்களிடம் கைவரிசையை காட்டி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், சுந்தர் சென்னையில் எந்த இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார் என்ற விசாரணையை போலீசார் துவங்கியபோது சென்னையிலும் இவர் ஒரு சில பெண்களிடம் தொடர்பு வைத்திருக்கிறாரா என்ற விசாரணையையும் துவங்கியுள்ளது.