தனது படத்தின் வெற்றி விழா – மேடையில் நடனமாடிய கேப்டன் – இப்படி ஒன்ன பாத்திருக்கீங்களா.

0
3561
vijayakanth
- Advertisement -

கேப்டன் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது நடிகர் விஜயகாந்த் தான். விஜயகாந்த் அவர்கள் தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் ஆவார். இவர் சில ஆண்டுகளாகவே சினிமாவில் நடிப்பதை விட்டு முழு கவனத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார். இவர் நடிகர் என்று சொல்வதை விட சிறந்த அரசியல்வாதி என்றும் சொல்வார்கள். தூரத்து இடி முழக்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயகாந்த். இவரை கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். 1978 ஆம் ஆண்டிலே தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர். ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். இவர் இதுவரை 156 படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் இதுவரை தமிழ் மொழி படங்கள் தவிர வேறு எந்த மொழி படங்களிலும் நடித்தது கிடையாது. நடிக்க வாய்ப்பு வந்தாலும் அந்த வாய்ப்பை இவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவருடைய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர் அதிகமாக படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சேவைகளைச் செய்யும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து உள்ளார். மேலும், நடிகர் விஜயகாந்த் அவர்கள் முன்னாள் நடிகர் சங்கத்தின் தலைவரும் ஆவார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான் நடித்த படத்தின் வெற்றி விழா ஒன்றில் நடனமாடிய புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனரான எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில்1981 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா மாதேவி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கு வெற்றி விழா நடந்தது. இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் நடனமாடியிருக்கிறார். பொதுவாக இவர் படங்களில் நடனம் ஆடி இருப்பதை தான் நாம் பார்த்திருப்போம். இவர் வெற்றி விழாவில் ஆடிய அரிய புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் டிரண்டிங் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement