என் அப்பா எனக்கு இந்த முஸ்லீம் பெயர தான் வைக்கறதா இருந்தாரு ஆனா – கேப்டன் மகன் சொன்ன விஷயம்.

0
476
vijayakanth
- Advertisement -

அப்பா எனக்கு இஸ்லாமியர் பெயர் தான் வைத்தார் என்று விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், இவர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. பின் இவர் அரசியலில் குதித்து விட்டார். சமீப காலமாக இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா, அரசியல் இரண்டிலும் விலகி இருக்கிறார். மேலும், இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சண்முக பாண்டியன்:

2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘சகாப்தம்’. இந்த படத்தினை இயக்குநர் சுரேந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சண்முக பாண்டியன் நடித்திருந்தார். இது தான் சண்முக பாண்டியான் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம். இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹா ஹிங்கே என்பவர் நடித்து இருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சுப்ரா ஐயப்பா, ரஞ்சித், தேவயாணி, ஜெகன், பவர் ஐயப்பா, சீனிவாசன், சண்முகராஜன், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.

சண்முக பாண்டியன் நடித்த படம்:

இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தும் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ‘மதுர வீரன்’ என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்தார். இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியிருந்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, மைம் கோபி, பால சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர். அதேபோல் இந்த படமும் ஹிட் ஆகவில்லை. இதனால் சண்முக பாண்டியன் சினிமாவிற்கு பிரேக் கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

குற்றப்பரம்பரை படம்:

தற்போது ஷண்முக பாண்டியன் சசிகுமார் இயக்கி வரும் குற்றப்பரம்பரை என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் தான் குற்றப்பரம்பரை. இதற்காக சண்முக பாண்டியன் அதிகமாக தாடி, முடி வளர்ப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. சமீபத்தில் கூட இவரின் கே ஜி எஃப் படத்தில் வரும் யாஷ் கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சண்முக பாண்டியன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய அப்பா முதலில் எனக்கு இஸ்லாமியர் பெயர் தான் வைக்க நினைத்தார்.

முஸ்லீம் பெயர் வைக்க காரணம்:

அப்பாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஜாதி, மதம் மீது எந்த ஒரு ஈடுபாடும் கிடையாது. அதனால் இஸ்லாம் மதத்தில் இருந்து பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால், பலரும் வேண்டாம் என்று சொன்னார்கள். என் தந்தை கேட்கவில்லை. பிறகு பெயர் வைக்கும் இடத்தில் அதிகாரிகள் எல்லாம் இப்போது பிரச்சனை இல்லை. எதிர்காலத்தில் அவர் பாஸ்போர்ட்டில் சவுகத்அலி, இந்து என்று குறிப்பிட்டு இருந்தால் அவருக்கு பிரச்சனை வரும் என்று கூறியும் என் மகன் வெளிநாட்டிற்கே போக வேண்டாம் என்றெல்லாம் சொல்லியிருந்தார். பின் ஏதேதோ சொல்லி என் பெயரை மாற்றி சண்முக பாண்டியன் என்று வைத்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement